ASUS நிறுவனம்  அடுத்தடுத்தாக அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் வரிசையில் Zenfone 2 Deluxe Special Edition எனும் ஒரு விஷேட பதிப்பை அறிமுகப்படுத்துகின்றது.

Zenfone 2 Deluxe Special Edition ஸ்மார்ட் போன்


ASUS நிறுவனமானது Zenfone 2 Deluxe எனும் ஸ்மார்ட் போனை ஏற்கனவே இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் அவைகள் 64GB மற்றும் 128GB உள்ளக நினைவகங்களை கொண்டதாகவே அமைந்திருந்தன. எனினும் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிப்பானது 256GB அளவிலான உள்ளக நினைவகத்தை கொண்டிருப்பதால் இது  Zenfone 2 Deluxe Special Edition என பெயர் குறிக்கப்பட்டுள்ளது.




ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி விளையாட்டுக்களில் ஈடுபடும் விளையாட்டுப் பிரியர்களை நோக்காகக் கொண்டு அதி கூடிய உள்ளக நினைவகத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் ஆனது Asphalt 8 எனும் விளையாட்டு நிறுவப்பட்ட நிலையில் வெளியிடப்படுகின்றது.


தொடர்புடைய இடுகை: Asus அறிமுகப்படுத்தும் Zenfone Max எனும் ஸ்மார்ட் போன்

மேலும் இதன் விபரக் குறிப்புகள் பின்வருமாறு.


  • Android 5.0 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது 1080 x 1920 Pixels resolution இல் அமைந்த 5.5 அங்குல திரையை கொண்டுள்ளது.
  • மேலும் 2.5GHz வேகத்தில் இயங்கக்கூடிய 64-Bit Intel Atom Z3580 Processor ஐ கொண்டுள்ள இது 4GB RAM நினைவகத்தை கொண்டுள்ளது.
  • இவற்றுடன் 13MP பிரதான கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 4G LTE, WiFi, Bluetooth 4.0, GPS, Dual SIM போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Sources: asusfanaticos

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top