கூகுளால் நிர்வகிக்கப்படும் ஸ்மார்ட் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு இயங்குதளம் இன்று பல லட்சக்கணக்கான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மாஷ்மெலோவ்


அந்த வகையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஆரம்ப பதிப்பான Cupcake 1.5 தொடக்கம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்டு 5 லாலிபாப் இயங்குதளம் வரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்புக்கும் ஒரு வரிசை முறையில் அவற்றின் பெயர்களை இட்டு வருகின்றது.


 Android Cupcake 1.5 தொடக்கம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் Android 5 Lollipop வரை அதன் பெயர்கள் பின்வருமாறு அமைகிறது.


  • C- Cupcake (1.5)
  • D- Donut (1.6)
  • E- Eclair (2.0–2.1)
  • F- Froyo (2.2–2.2.3)
  • G- Gingerbread (2.3–2.3.7)
  • H- Honeycomb (3.0–3.2.6)
  • I- Ice Cream Sandwich (4.0–4.0.4)
  • J- Jelly Bean (4.1–4.3.1)
  • K- KitKat (4.4–4.4.4, 4.4W–4.4W.2)
  • L- Lollipop (5.0–5.1.1)


இவற்றினை நோக்கும் போது அதன் பெயர்கள் ஆங்கில எழுத்துக்களின் வரிசை முறைப்படி அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.இதன் அடிப்படையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பெயர் ஆங்கில எழுத்தான "M" என்பதில் தான் ஆரம்பிக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில்ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பெயர் "மார்ஷ்மல்லோ" (Marshmallow) என்று அமையும் என கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த புதிய பதிப்பானது Android உலகை கதிகலங்க வைத்திருக்கும் Stagefright எனும் ஆபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கீழ் இருப்பது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ (Marshmallow) இயங்குதளத்தை அடையாளப்படுத்தும் உத்தியோகபூர்வ iCon ஆகும்.Android 6.0 மாஷ்மெலோவ்

கீழே இருப்பது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பின்புலப்படங்களாகும் நீங்கள் விரும்பினால் இவற்றினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Android M preview 3 wallpapers


ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் துவங்கும் போது அதன் பூட் ஸ்க்ரீன் அனிமேஷன் விளைவானது பின்வருமாறு அமைந்திருக்கும்.


Android 6.0 மாஷ்மெலோவ் Boot அனிமேஷன்
image credit: android-developers.blog, clockworklemon

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top