எமது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலிகளை கூகுள் தரும் ப்ளே ஸ்டோரில் இருந்து மாத்திரம் இன்றி இணையத்தில் உள்ள இன்னும் பல தளங்களில் இருந்தும் தரவிறக்கிக் கொள்ள முடியும்.

Amazon தளத்தில் இருந்து இலவச அப்ளிகேஷன்


இருப்பினும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கப்படும் செயலிகளை தரவிறக்க உதவும் அனைத்து தளங்களும் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது.

எனினும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நாம் தரவிறக்கும் அதே செயலிகளை அதே பாதுகாப்புடன் தரவிறக்கிக்கொள்ள Amazon நிறுவனத்தின் Android சாதனத்துக்கான செயலி உதவுகின்றது.


இந்த செயலியின் ஊடாகவே ரூபா 5500 க்கும் மேற்பட்ட பெறுமதியுடைய (INR) ஆண்ட்ராய்டு கேம்ஸ் அப்ளிகேஷன் போன்றவற்றை தரவிறக்கிக் கொள்ள முடிகிறது. எனவே இந்த Amazon செயலி பற்றி அறிந்து கொள்வது நல்லது.

உலகளாவிய ரீதியில் பல மில்லியன் கணக்கான பயனர்களால் இந்த Amazon செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


இதனை Android பயனர்கள் விரும்பி பயன்படுத்த பல காரணங்கள் உள்ளன. 


  • ஒரே கூரையின் கீழ் அனைத்து பொருட்கள் சேவைகளையும் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்புவது போல் இந்த செயலியில் வெறும் Android சாதனங்களுக்கான செயலிகள் மாத்திரம் அல்லாது ஆடை அணிகலன்கள், இலத்திரனியல் சாதனங்கள், செயலிகள், மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என இணையத்தின் ஊடாக எவ்வாறான பொருட்களை எல்லாம் கொள்வனவு செய்ய முடியுமோ அந்த அனைத்து பொருட்களும் இந்த செயலியில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றினை இந்த செயலியின் ஊடாக தேடிப்பெருவதும் இலகு.
  • மேலும் இதில் கட்டணம் செலுத்தி பெறவேண்டிய ஒரு செயலி அன்றாடம் இலவசமாக வழங்கப்படுவதுடன் அடிக்கடி அதிரடியாக பல பெறுமதியான செயலிகள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றது.
  • இந்த செயலியை Play Store இல் இருந்து தரவிறக்க முடியாது என்றாலும் Amozon தளத்தில் இருந்து இதற்கான APK கோப்பினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவிக்கொள்ள முடியும்.
  • இதனை தரவிறக்கி நிறுவிய பின் இந்த செயலியை திறந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் ஏனைய தகவல்களையும் உள்ளிட்டு இலவச கணக்கொன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அந்த கணக்கை பயன்படுத்தி உள் நுழைவதன் ஊடாக அன்றாடம் கட்டணம் செலுத்தி பெறவேண்டிய ஒரு செயலியை இலவசமாக பெற முடிவதுடன் சலுகை அடிப்படையில் வழங்கப்படும் பொருட்களையும் பாதுகாப்பான முறையில் இணையத்தின் ஊடாக கொள்வனவு செய்யலாம்.அத்துடன் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை AVG AntiVirus PRO, Photo Lab PRO, Doodle Devil, Runtastic Pro போன்ற ரூபா 5500 க்கும் அதிக பெறுமதி உள்ள 32 செயலிகளை இந்த Amazon செயலியின் ஊடாக இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.நீங்களும் இந்த Amazon செயலியை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Amazon Application For Android

பின்வரும் இணைப்பின் மூலம் ரூபா 5500 க்கும் அதிக பெறுமதி உள்ள செயலிகளை தரவிறக்கிக் கொள்ள முடியும். (இவற்றினை தரவிறக்கிக் கொள்ள மேலே இணைப்பில் தரப்பட்டுள்ள Amazon செயலி உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.)Download Over $90 in Apps & Games Freeதொடர்புடைய இடுகை: 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top