புதிதாக நாம் வாங்கிய ஸ்மார்ட் சாதனம் ஒன்றின் செயற்திறனுக்கும் அதனை நாம் சிறிது காலம் பயன்படுத்திய பின் அதன் செயற்திறனுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு.

Greentify தமிழ்


ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய எமது Android சாதனம் காலப்போக்கில் மந்த கதியில் இயங்குவதும், ஆரம்பத்தில் ஒரு தடவை மின்னேற்றினால் அதிக நேரம் பயன்படுத்த முடிந்ததுடன் அதுவே காலப்போக்கில் மின்னேற்றி அடுத்த நிமிடத்தில் Battery இன் மூலம் சேமிக்கப்பட்ட சக்தி குறைவடைவதும் வழமையான விடயமாகும்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக நாம் எமது Android சாதனத்திற்கு நிறுவும் ஏராளமான செயலிகள் தானாகவே எமது Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்குவதும் ஒரு காரணமாகும்.

எனவே இவ்வாறு தானாக இயங்கும் செயலிகளை கண்டறிவதன் மூலம் அவற்றின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் Power Cleaner, Clean master, Advanced Mobile Care போன்ற செயலிகளை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போல் ஆனால் சற்று வேறுபட்ட வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகின்றது Greentify எனும் Android சாதனத்துக்கான செயலி.

இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கும் செயலிகளை முற்றாக கட்டுப்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

அதாவது உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் தேவையற்ற செயலிகள் தானாக இயங்கும் போது அவற்றினை எமது Android சாதனத்தை பேணும் செயலிகள் தற்காலிகமாகவே முடக்குகின்றது.

என்றாலும் Greentify மூலம் பின்புலத்தில் இயங்கும் செயலிகளை முடக்கும் போது முடக்கப்பட்ட செயலிகள் மீண்டும் தானாகவே இயங்க முடியாதவாறு Force Stop செய்து கொள்ள முடியும்.

எனவே உங்கள் Android சாதனத்தின் சக்தியை நீண்ட நேரம் சேமிக்க முடிவதுடன் அதனை வேகமாக இயங்கவும் செய்யலாம்.

தொடர்புடைய இடுகை: உங்கள் Android சாதனத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? (இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு வசதி)


Greenify செயலியை Android சாதனத்தில் பயன்படுத்துவது எவ்வாறு?

  • இதனை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கி நிறுவிய பின் திறந்து கொள்க.

  • பின் குறிப்பிட்ட செயலியின் வலது மேல்  மூலையில் தரப்பட்டுள்ள கூட்டல் (+) அடையாளத்தினை சுட்டுக.

Greentify செயலி Greentify இடைமுகம்

  • இனி உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து செயலிகளும் பட்டியல் படுத்தப்படும். அவற்றுள் Running in Background என்பதற்குக் கீழ் உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கும் செயலிகள் பட்டியல் படுத்தப்படும். 
  • அதே போல் "May Slow Down the Device When" என்பதற்குக் கீழ் உங்கள் Android சாதனத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகள் இடம் பெரும் போது இயங்கும் செயலிகள் பட்டியட் படுத்தப்படும்.

உதாரணத்திற்கு உங்கள் Android சாதனம் இணையத்துடன் தொடர்பு படும் போது இயங்க துவங்கும் செயலிகள், அல்லது உங்கள் Android சாதனம் Unlock செய்யப்பட பின் இயங்கத்துவங்கும் Android செயலிகள் போன்றன.

  • இவ்வாறு பட்டியல் படுத்தப்படும் செயலிகளுள் தேவையற்ற அனைத்து செயலிகளையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

Greentify செயலிகள் Greentify பயன்படுத்துவது எப்படி


  • பின் அவைகள் உங்கள் Greentify செயலியில் இணைக்கப்பட்டு விடும் இனி Greentify செயலியின் பிரதான இடைமுகத்தில் இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள Zzz Icon ஐ சுட்டுவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த செயலிகளின் செயற்பாட்டை முற்றாக முடக்கிக் கொள்ள முடியும்.
  • மேலும் இந்த செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுவதன் மூலம் பெறப்படும் சாளரத்தில் Create Hibernation Shortcut என்பதனை சுட்டுவதன் ஊடாக அவற்றுக்கான Shortcut Button களை Home Screen இல் இட்டுக்கொள்ள முடியும்.
  • இதன் மூலம் குறிப்பிட்ட Shortcut ஐ சுட்டுவதன் ஊடாக நீங்கள் ஏற்கனவே தெரிவு செய்த பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை மிக இலகுவாக முடக்கிக் கொள்ள முடியும்.

Create Hibernation Shortcut AndroidCreate Hibernation ShortcutCreate Hibernation Shortcut

  • அதே போல்  Create Hibernation Shortcut  என்பதனை சுட்ட வரும் சாளரத்தில் உள்ள Hibernate + Lock Screen என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தினை Lock செய்யும் அதே வேலை பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முடக்குவதற்கான Shortcut ஐ Home Screen இல் நிறுவிக்கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை: உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான செயலி

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்கு எமது Facebook மற்றும் Google Plus பக்கங்களின் ஊடாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Image Credit: Udownloadu


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top