ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகப்படுத்தும் மிகச்சிறந்த நிறுவனங்களுள் ஒன்றான Sony நிறுவனம் Sony Xperia M5 எனும் Smart சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது.
இந்த ஸ்மார்ட் போன் ஆனது சிறந்த Selfie புகைப்படங்களை எடுக்கும் வகையில் 13 Megapixel திறனுடைய முன் பக்க Camera ஐ கொண்டுள்ள அதே வேலை 20.5 Megapixel தெளிவுத் திறனுடைய பிரதான Camera ஐ கொண்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.மேலும் இதன் பிரதான Camera ஆனது 5x zoom செய்யும் திறனை கொண்டுள்ள அதேவேளை 4K வீடியோ கோப்புக்களை பதிவு செய்து கொள்ளவும் வழி வகுக்கின்றது.

  •  5 அங்குல திரையை கொண்டுள்ள இந்த சாதனமானது Android 5.0 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.
  •  2.0 GHz வேகத்தில் அமைந்த 64-bit MediaTek Helio X10 Octa core Processor ஐ இது கொண்டுள்ளதுடன் 3 GB Ram ஐயும் கொண்டுள்ளது.
  •  16GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை 200GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.
  •  Wi-Fi, Bluetooth, 4G LTE, NFC, GPS, FM radio போன்ற வசதிகளை கொண்டுள்ள இது Single SIM மற்றும் Dual SIM என இரு வேறு பதிப்புக்களை கொண்டுள்ளது.
  •  சுமார் 142 கிராம் எடையை கொண்டுள்ள இது 145 மில்லி மீட்டர் உயரத்தினையும் 72 மில்லி மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ள அதேவேளை கருப்பு, வெள்ளை மற்றும் பொன் (Gold) நிறங்களில் கிடைக்கின்றது.

அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட் போன் தொடர்பான எதுவித விலை விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.Sources : Sonymobile


Love to hear what you think!

1 comments:

 
Top