நீங்களும் விண்டோஸ் கணினியை பயன்படுத்துபவரா? 

அப்படியாயின் நாம் அதன் மூலம் ஏராளமான செயற்பாடுகளை மேற்கொள்வோம் அல்லவா?அவற்றுள் பிரதானமாக இணையத்தை உலா வருவதற்கும் மென்பொருள்களை நிறுவி அவற்றின் மூலம் பல்வேறு கருமங்களை மேற்கொள்வதற்கும் என நாம் அதிகம் எமது விண்டோஸ் கணினியை பயன்படுத்துவோம்.
இவ்வாறன செயற்பாடுகளின் போது இணையத்தில் சில நிரல்கள் எம்மை குறிவைத்தே இயங்குகின்றன. அது மட்டும் அல்லாது சில இலவச மென்பொருள்களை நிறுவும் போது அவற்றுடன் இணைந்தாட் போல் சில தேவையற்ற மென்பொருள்கள், நிரல்கள், மற்றும் Toolbar கள் போன்றனவும் எமது கணினியில் நிறுவப்பட்டு விடுகின்றன.இவ்வாறான நிரல்கள் உங்கள் இணைய உலாவியில் அவசியம் அற்ற Toolbar போன்றவைகளை நிறுவி விடுவதுடன் இணையத்தில் உங்கள் செயற்பாடுகளை கண்காணிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றன.

இவைகள் தவிர நீங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை உங்கள் கணினியில் நிறுவி பாதுகாப்பான முறையில் நீங்கள் இணையத்தை உலா வர தவறும் பட்சத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சூறையாடும் நிகழ்வுகளும் இடம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது போன்று எமது கணினியூடாகவே எமக்கு வேட்டு வைக்கும் நிகழ்வுகளை கண்டறிந்து அவற்றிலிருந்தும் எமக்கு பாதகாப்பு அளிக்கக் கூடிய AdwCleaner எனும் மென்பொருளை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அது போன்று ஆனால் சற்று வேறுபட்ட அமைப்பினையும் வசதிகளையும் தரக்கூடிய ஒரு அருமையான மென்பொருளே Junkware Removal Tool எனும் இலவச மென்பொருளுமாகும்.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்

இந்த மென்பொருளானது இணையத்தில் தேவையற்ற நிரல்களாக இனங்காணப்பட்டுள்ள பின்வரும் கோப்புக்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அவற்றினை கண்டறிந்து முற்றாக நீக்கி விடுவதுடன் இன்னும் பல இனங்காணப்பட்ட நிரல்களில் இருந்து நீங்கள் திசை திருப்பப் படுவதிலிருந்தும் உங்களை பாதுகாக்கின்றது.

 • 24×7 help
 • Advanced System Protector
 • AppGraffiti
 • Ask Toolbar
 • Astromenda
 • Babylon
 • Baidu
 • Blekko
 • Browserprotect
 • Browsersafeguard
 • Claro
 • Complitly
 • Conduit
 • DataMgr
 • Dealio
 • DealPly
 • Delta
 • Driver Pro
 • Driver Cure
 • Eorezo
 • ESafe
 • Facemoods
 • Fantastiames
 • Findgala
 • Freecause
 • Getsavin
 • Globaearch
 • Guffins
 • Hao123
 • ILivid
 • Iminent
 • Inbox Toolbar
 • Incredibar
 • Industriya
 • Istartsurf
 • JollyWallet
 • KingBrowse
 • Lasaoren
 • Linkury
 • Lyrics
 • Mighty Magoo
 • MoboGenie
 • Mocaflix
 • MyPC Backup
 • MyWebSearch
 • NewTab
 • Omniboxes
 • OoVoo Toolbar
 • OtShot
 • PC MightyMax
 • PC Optimizer Pro
 • PC Performer
 • PC Speed Maximizer
 • PC Speed Up
 • PCFixSpeed
 • PCSafeDoctor
 • Plus-HD
 • Pricepeep
 • Privitize
 • QuestBasic
 • Quiknowledge
 • Qvo6
 • Qwiklinx
 • RocketTab
 • Savesense
 • Search Protection
 • Searchqu
 • Snap Do
 • Speeditup Free
 • Strongvault
 • Swag Bucks
 • SweetIM
 • SysTweak
 • Tidynetwork
 • TopArcadeHits
 • Visualbee
 • Wajam
 • Web Assistant
 • WebEnhance
 • Whitesmoke
 • XTab
 • Yontoo
 • Yrjie
 • Zoomex
 • Zugo

கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவரினாலும் இந்த மென்பொருளை மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

 • இதனை தரவிறக்கிய பின் Double Click செய்வதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து கொள்ள முடியும். 

(அது உங்கள் கணினியில் உள்ள Command Prompt மூலம் திறக்கப்படும்.)

 • பின் கணினியில் உள்ள ஏதாவது ஒரு விசையினை அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியிள் உள்ள தேவை அற்ற நிரல்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

இதனை நீங்களும் உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Download Junkware Removal Tool 

மேலும் இதனையும் பார்க்க: Flash Drive சாதனத்தில் இருந்து தானாகவே இயங்கி கணணிக்குள் உட்புகும் வைரஸ் கோப்புக்களை நீக்க உதவும் இலவச மென்பொருள்

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top