ஆரம்பத்தில் இணையம் என்றாலே எட்டாக் கனியாக இருந்த எமக்கு, இன்று எமது வீட்டு வாசல் வரை இணைய இணைப்பு தேடி வந்துள்ளது என்றால் மறுப்பதற்கு இல்லை.

இலங்கை கூகுள் இணையம்


அந்தவகையில் Google இன் Project Loon எனப்படும் Balloon கள் மூலம் Wi-Fi இணைய இணைப்பு வழங்கும் திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இணைய ஜாம்பவான் கூகுள் உடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செயற்திட்டம் இன்னும் ஐந்து மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Google மூலம் அதி உயரத்தில் அமைக்கப்படும் 13 Balloon கள் மூலம் இலங்கையில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இலவச இணையத்தை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் Google இன் Project Loon திட்டத்தின் மூலம் இணைய இணைப்பை பெரும் முதல் நாடாக இலங்கை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன் Twitter பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

புதுப்பிக்கப்பட்டது: இந்த வசதியானது குறைந்த செலவில் இணைய இணைப்பை பெறுவதற்கு வழிவகுக்கும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top