எமது Android சாதனத்துக்கு பின்புலப்படமாக இடுவதற்கு என ஏராளமான பின்புலப்படங்கள் (Wallpaper) இணையத்தில் கிடைப்பதுடன் எமது பல்வேறு காட்சிகளை கொண்ட பின்புலப்படங்கள் எமது Android சாதனத்திலும் தரப்பட்டுள்ளன.

 Android பின்புலப்படம்


இருப்பினும் பல்வேறு நிறங்களை கொண்ட பின்புலப்படங்களை பயன்படுத்துவதால் குறிப்பிட்ட ஒரு Android செயலியை தேடிப்பெறுவது சிரமமாக இருந்தாலோ அல்லது எளிமையான தோற்றத்தில் உங்கள் Android சாதனத்தை நீங்கள் பயன்படுத்த விரும்பினாலோ உங்களுக்கு உதவுகின்றது Color எனும் Android சாதனத்துக்கான செயலி.


துரதிஷ்டவசமாக தனித்த வர்ணங்களில் அமைந்த பின்புலப்படங்களை பயன்படுத்திக் கொள்ளும் வசதி Android சாதனங்களில் தரப்படவில்லை எனினும் Color எனும் செயலியானது தனித்த வர்ணங்களில் அமைந்த பின்புலப்படங்களை உங்கள் Android சாதனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

android wallpaper செயலி


இதில் பல நூற்றுக்கணக்கான வர்ணங்களில் அமைந்த பின்புலப்படங்கள் தரப்பட்டுள்ளதுடன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் வெவ்வேறு வர்ணங்களில் அமைந்த பின்புலப்படங்களை உருவாக்கி அவற்றினை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.


பயன்படுத்துவதற்கு மிக இலகுவான முறையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை நீங்களும் உங்கள் Android Smart சாதனத்துக்கு நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top