தொடர்ச்சியாக புதுப்புது ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகப்படுத்தி வரும் Samsung நிறுவனமானது Samsung Galaxy Tab A Plus எனும் Tablet சாதனத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.


Samsung Galaxy Tab A Plus எனும் ஸ்மார்ட் சாதனம்


1024 x 768 Pixels resolution உடன் கூடிய 9.7 அங்குல திரைய இது கொண்டுள்ளதுடன் Samsung S Pen ஐயும் தன்னகத்தே கொண்டுள்ளது.


மேலும் இது 1.2GHz வேகத்தில் இயங்கக் கூடிய Quad core processor மற்றும் 2GB RAM போன்றவற்றுடன் 16GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. இதன் நினைவகத்தை microSD நினைவகத்தை பயன்படுத்தி மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

இவற்றுடன் 2 megapixel திறன் வாய்ந்த முன் பக்க Camera ஐயும் 5 megapixel தெளிவுத் திறனுடைய பிரதான Camera போன்றவற்றுடன் நீடித்து உழைக்கக் கூடிய 6000 mAh வலுவுடைய Battery இதில் தரப்பட்டுள்ளது.

Android 5.0 Lollipop இயங்குதளத்தை கொண்டு இயங்கக்கூடிய இதன் விலை 399 யூரோக்கள் ஆகும். (INR 28500)


மூலம்: Samsung 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top