Samsung நிறுவனம் அறிமுகப்படுத்தும் Smart Phone களின் வரிசையில் Samsung Galaxy A8 எனும் Smart Phone ஐயும் அறிமுகப்படுத்துகின்றது.


5.7 அங்குல Super AMOLED திரையை கொண்டுள்ள இது Android 5.1.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.


இயங்குதளம் மற்றும் வடிவமைப்பு 

  • Samsung Galaxy S6 Smart Phone இன் அமைப்பை கொண்ட ஆனால் அதனை விட இது சற்று தடிப்பு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Galaxy S6 உடன் ஒப்பிடுகையில் S6 ஆனது  6.9mm தடிப்பை கொண்டிருக்கும் அதேவேளை  Samsung Galaxy A8 Smart Phone ஆனது வெறும் 5.9mm தடிப்பை கொண்டுள்ளது. மேலும் இது 151 கிராம் எடையை கொண்டுள்ளது.

Processor, RAM, மற்றும் Battery

  • மேலும் இது Octa core 64-bit Qualcomm Snapdragon 615 mobile வகையில் அமைந்த Processor ஐயும் 2GB RAM ஐயும் கொண்டிருக்கும் அதேவேளை 3050 mAh திறன் வாய்ந்த Battery ஐ தன்னகமாக கொண்டுள்ளது. இந்த Battery ஆனது குறிப்பிட்ட சாதனத்தில் இருந்து வேறு பிரிக்க முடியாதவாறு (Non Removable) வடிவமைக்கப்பட்டுள்ளது.

நினைவகம் 

  • 16GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD ஐ பயன்படுத்தி 128 GB வரை அதிகரித்துக் கொள்ள  முடியும்.

Camera

  • அத்துடன் இது 5 megapixel திறனுடைய முன்பக்க Camera உடன் 16 megapixel திறனுடைய பிரதான Camera ஐ கொண்டுள்ளது.

ஏனைய வசதிகள் 

  • இவைகள் தவிர 4G LTE வலையமைப்பை ஆதரிக்கக் கூடிய இது  Fingerprint sensor ஐயும் தன்னகமாக கொண்டுள்ளதுடன் கருப்பு, வெள்ளை, மற்றும் பொன் நிறங்களில் இது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

சந்தைபடுத்தல் 

  • ஆரம்ப கட்டமாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இதன் விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


Sources: Samsung

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top