நாம் குறிப்பிட்ட ஒரு நபருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலினை தற்செயலாகவோ தவறுதலாகவோ இன்னும் ஒருவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டால் அதனை அனுப்பியது தொடக்கம் 30 செக்கன்களுக்குள் சென்று விடாமல் தடுப்பதற்கான வசதியை அண்மையில் Google நிறுவனம் Gmail சேவையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

கணினி இயங்கவில்லை


என்றாலும் "அது தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ளது என்பதை அறிந்ததன் பின்" அதனை நாம் அனுப்பியது தொடக்கம் 30 செக்கன்களுக்குள் சென்றுவிடாமல் தடுக்க தவறிவிட்டால் குறிப்பிட்ட மின்னஞ்சல் எமது கட்டுப்பாட்டை மீறி குறிப்பிட்ட நபருக்கு அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சென்ற விடும்.

என்றாலும் Dmail எனும் Google Chrome இணைய உலாவிக்கான நீட்சியானது நீங்கள் "அனுப்பிய மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டு விட்டதே...!" என கருதும் சந்தர்பத்தில் அதனை ஒரு வாரம் கழிந்த பின்பும் தடுப்பதற்கான வசதியை தருகின்றது.

இந்த நீட்சி மூலம் பின்வரும் வசதிகளை பெற முடியும்.

 • நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பட்டதாக நீங்கள் கருதும் சந்தர்பத்தில் அதனை உடனடியாகவோ அல்லது நீங்கள் விரும்பிய ஒரு நேரத்திலோ தடை செய்யலாம்.
 • நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலை ஒரு மணித்தியாலத்தின் பின்போ அல்லது ஒரு நாளின் பின்போ அல்லது ஒரு வாரத்தின் பின்போ தானாகவே அது அழியும் படி அமைத்துக் கொள்ள முடியும்.
 • இதனை நீங்கள் விரும்பினால் மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது ON/OFF Button களை தன்னகமாக கொண்டுள்ளது.

நீங்களும் Google Chrome இணைய உலாவியை  பயன்படுத்தும் அதே நேரம் Gmail சேவையை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் வழிமுறைகளில் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

Download & Install Dmail Extension For Google Chrome

 • இதனை நிறுவிய பின் உங்கள் Gmail கணக்கின் ஊடாக மின்னஞ்சலினை உருவாக்கும் போது Damil எனும் புதியதொரு வசதி தோன்றியிருக்கும். (நீங்கள் விரும்பினால் அதனை செயற்படுத்துவதற்கான வசதி தரப்பட்டுள்ளது.)
Damil ஜிமெயில்


 • அதனை நீங்கள் செயற்படுத்திய நிலையில் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி இருந்தால் மாத்திரமே "குறிப்பிட்ட மின்னஞ்சல் தவறான முகவரிக்கு அனுப்பி விட்டதாக நீங்கள் கருதும் சந்தர்பத்தில்" அதனை தடை செய்ய முடியும்.
 • அவ்வாறு நீங்கள் இதனை செயற்படுத்திய நிலையில் தவறான முகவரிக்கு அனுப்பி இருந்தால் உங்கள் மின்னஞ்சல் கணக்கின் Sent Box அல்லது இற்கு செல்லுங்கள்.
 • பின் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்துகொள்ளுங்கள்.
Gmail அனுப்பிய மின்னஞ்சல்

 • இனி அதில் Revoke Email எனும் Button தரப்பட்டிருக்கும். அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல் பெறப்பட்டவரால் பார்க்க முடியாதவாறு அதன் உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிடும்.
அவ்வளவுதான்.

மேலும் இதன் மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒன்று குறிப்பிட்ட கால எல்லையில் தானாக நீங்கும் படி அமைத்துக் கொள்ளவும் முடியும்.


dmail revoke


 • இதற்கு Dmail ஐ (ON) செயற்படுத்திய நிலையில் அமைத்து விட்டு குறிப்பிட்ட Dmail Bar இன் வலது கீழ் மூலையில் "Destroy" எனும் ஒரு வசதி தரப்பட்டிருக்கும் அதன் மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல் தானாக நீங்குவதற்கான கால எல்லையை எம்மால் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

இது எப்படி சாத்தியம் என ஒரு கேள்வி உங்களுக்கு எழலாம் அல்லவா?

 • நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக சென்றுவிடும்.
 • பின் அது பெறப்பட்டவரின் மின்னஞ்சலில் View Message என்னும் Button உடன் This secure message was sent using Dmail. To view this message, simply click the button below எனும் செய்தி தோன்றும்.
Dmail பெறுபவர்


 • இனி அவரால் View Message எனும் Button ஐ அழுத்துவதன் மூலம் நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய செய்தியை தடை இன்றி பார்க்கலாம்.
Dmail இல் பெறப்பட்ட செய்தி • என்றாலும் அனுப்பிய மின்னஞ்சலை மேற்கூறிய வகையில் நீக்கி இருந்தால் View Message எனும் Button ஐ அவர் அழுத்தும் போது Message Unavailable, This message is no longer available for viewing என்ற செய்தியே தோன்றும்.

Dmail revoke செய்தி


நீங்கள் Goole Chrome இணைய உலாவி ஊடாக Gmail சேவையை பயன்படுத்துபவர் எனின் இதனையும் பார்க்க தவறாதீர்கள்: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா....? என்பதனை அறிந்துகொள்வது எவ்வாறு?

Image Credits: Gamer Headlines

Love to hear what you think!

1 comments:

 
Top