இது Oppo அறிமுகப்படுத்தும் Oppo Mirror 5 எனும் Smart Phone ஆகும்.
5 அங்குல திரையை கொண்டுள்ள இது Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ColorOS 2.1  எனும் இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.


மேலும்  1.2GHz Snapdragon Processor ஐ கொண்டுள்ள இது 2GB RAM ஐ கொண்டுள்ளது.

இவைகள் தவிர இந்த புதிய Oppo Mirror 5 எனும் Smart Phone ஆனது 16GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ளதுடன் microSD ஐ கொண்டு இதன் நினைவகத்தை 128GB வரையில் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

அனிமேஷன் படங்களையும் பிடிக்கும் வசதியை கொண்டுள்ள இது  5 Mega pixel திறனுடைய முன்பக்க camera ஐயும் 8 Megapixel பிரதான Camera ஐயும் இது கொண்டுள்ளது.

இவற்றுடன் Dual Sim வசதி கொண்டுள்ள இதில் Micro sim மற்றும் Nano Sim போன்றவைகளை பயன்படுத்த முடியும். மேலும் குறிப்பிட்ட சாதனத்தில் வேறுபிரிக்க முடியாதவகையில் பொருத்தப்பட்டுள்ள இதன் Battery ஆனது 2420mAh திறன் வாய்ந்ததாகும்.

ஆசியா, தென் ஆபிரிக்க, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு விடப்படவுள்ள இதனது விலை இது வரை அறிவிக்கப்படவில்லை.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top