இணையத்தில் கடவுச்சொல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு வீட்டையும் திறப்பதட்கு சாவி எவ்வளவு அவசியமோ இணையத்தில் இருக்கும் எமது கணக்குகளை நிர்வகிக்க கடவுச்சொல் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

Masterpasswordapp இணையதளம்


எனவே நாம் இணையத்தில் கணக்குகளை உருவாக்கும் ஓவ்வொரு சந்தர்பத்திலும் நாம் அமைக்கும் கடவுச்சொல் வலிமையாக அமைவதற்கு உங்கள் கடவுச்சொல் ஆங்கில பெரிய, சிறிய எழுத்துக்களுடன் எண்கள், குறியீடுகள் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும் என ஒவ்வொரு தளமும் வலியுறுத்துகின்றன.ஏனையவர்களால் ஊகிக்க முடியாத மிகவும் வலிமையான கடவுச் சொற்களை அமைத்துக் கொள்வது எவ்வாறு? எனும் பதிவை நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம். அதே போல் வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கிக் கொள்ள Google Chrome இணைய உலாவியும் துணை புரிகின்றது இதனையும் நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம் 

இதனையும் பார்க்க: வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி (மறைந்திருக்கும் வசதி)

இந்த பதிவானது வலிமையான கடவுச்சொற்களை உருவாக்க உதவும் இணையதளத்தை பற்றியதாகும்.

Masterpasswordapp எனும் இணையத்தளமானது மிகவும் வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கிக் கொள்ள உதவுகின்றது.

குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் Master Password போன்றவைகளை உள்ளிட்ட பின் குறிப்பிட்ட தளத்தின் இணைய முகவரியை உள்ளிடுவதன் மூலம் வலிமையான கடவுச்சொல் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியும்.

இது போல் நீங்கள் எத்தனை இணையதளங்களுக்கும் கடவுச்சொற்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

இங்கு Master Password எனப்படுவது உங்களால் எந்த ஒரு சந்தர்பத்திலும் ஞாபகம் வைத்திருக்கக் கூடிய நிலையான ஒரு கடவுச்சொல் ஆகும்.

எனவே நீங்கள் குறிப்பிட்ட தளத்தின் மூலம் கடவுச்சொற்களை உருவாக்கும் போது உங்கள் பெயரும், Master Password உம் மாற்றம் அடையாது ஆனால் குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரி மாத்திரமே மாற்றம் அடையும். ஆகவே வெவ்வேறு தளங்களுக்கும் வெவ்வேறு பட்ட கடவுச்சொற்கள் உருவாக்கப்படுகின்றது.ஒரு வேலை அவ்வாறு உருவாக்கப்பட்ட கடவுச்சொற்கள் உங்களுக்கு மறந்து விட்டாலும் கூட Masterpasswordapp தளத்துக்கு சென்று உங்கள் பெயர், Master Password மற்றும் குறிப்பிட்ட தளத்தின் இணைய முகவரி போன்றவற்றினை உள்ளிடுவதன் மூலம் அதே கடவுச்சொல்லை மீளவும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட தளத்தை பயன்படுத்துவதற்கு எவ்வித கணக்குகளையும் துவங்க வேண்டிய அவசியம் இல்லை எந்த ஒருவராலும் நேரடியாக பயன்படுத்தலாம். (இந்த தளத்தில் உங்களது எந்த தகவலும் சேமிக்கப்பட மாட்டாது)

குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல : Visit To Masterpasswordapp

மேலும் இதனையும் பார்க்க: உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பானதா? என்பதை அறிய உதவும் இணையதளம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top