Motorola நிறுவனம் மூன்றாம் தலைமுறைக்கான Moto G எனும் ஸ்மார்ட் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது.

 Moto G ஸ்மார்ட் சாதனம்

இதில் 8GB உள்ளக நினைவகத்தை கொண்ட ஒரு பதிப்பும் 16GB நினைவகத்தை கொண்ட மற்றுமொரு பதிப்பும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதில் 16GB நினைவகத்தை கொண்ட Moto G ஸ்மார்ட் போன் ஆனது 2GB RAM ஐ கொண்டிருக்கும் அதே வேலை 8GB நினைவகத்தை கொண்டுள்ள Moto G ஸ்மார்ட் போன் ஆனது 1GB RAM ஐ கொண்டுள்ளது. மேலும் இவற்றின் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி அதிகரித்துக்கொள்ள முடியும்.

மேலும் ஐந்து அங்குல திரையை கொண்டுள்ள இவைகள் 1.4GHz வேகத்தில் அமைந்த Quad core Snapdragon 410 processor ஐ கொண்டுள்ளதுடன் 2470 mAh திறன் வாய்ந்த Battery கொண்டுள்ளது.

அத்துடன் இவைகள் 5 megapixel தெளிவுத்திறன் கொண்ட முன்பக்க Camera ஐயும் 13 megapixel தெளிவுத்திறனில் அமைந்த பிரதான camera ஐயும் கொண்டுள்ளன.

இவைகள் தவிர நீர் மற்றும் தூசு உட்புக முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இது WiFi, Bluetooth, 4G LTE வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதில் 8GB பதிப்பு 179.99 அமெரிக்க டொலர்களாகவும் 16GB கொண்ட பதிப்பு 219.99 அமெரிக்க டொலர்களாகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது. இவைகள் முறையே 11500, 14000 இந்திய ரூபாய்கள் ஆகும்.

மூலம் : Motorola

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top