எமது தேவைக்கு ஏற்றவாறு வெவ்வேறு Keyboard செயலிகளை எமது Android சாதனத்தில் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதனடிப்படையில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான Sellinam Keyboard செயலி உட்பட Google இன் Google Handwriting Inputswiftkey மற்றும் fleksy + gif keyboard என ஏராளமான Keyboard செயலிகளை நாம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

மேற்கூறிய ஒவ்வொரு Keyboard செயலியும் ஒன்றிலிருந்து ஒன்று வெவ்வேறு பட்ட இடைமுகத்தை கொண்டதாகவும், வெவ்வேறு பட்ட வசதிகளை தரக்கூடியதாகவும் அமைந்துள்ளன.

அந்தவகையில் Clavis எனும் keyboard செயலியும் கூட சற்று வேறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளதுடன் வித்தியாசமான வசதிகளை தருகின்றது.

Clavis எனும் இந்த Keyboard செயலியானது நாம் கணினியில் பயன்படுத்தும் Keyboard இன் அமைப்பைக் கொண்ட Android சாதனனகளுக்கான Keyboard செயலியாகும்.

  • கணினியின் Keyboard இல் இருப்பது போலவே Ctrl, Alt, Shift, Enter, Caps Lock, Tab என அனைத்து விசைகளும் இதில் தரப்பட்டுள்ளது.
  • கணினியில் போலவே Ctrl + A விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் அனைத்து எழுத்துக்களையும் தெரிவு செய்ய முடிவதுடன் Ctrl + C மூலம் Copy செய்யவும், Ctrl + V மற்றும் Ctrl + X போன்றவைகள் மூலம் Past, Cut போன்ற செயற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.
  • Settings பகுதியின் ஊடாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வெவ்வேறு பட்ட ஏழு வகையான தோற்றங்களை இதற்கு வழங்க முடிவதுடன் Keyboard இன் அளவையும் (Size) மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
  • இவைகள் தவிர Macro எனும் ஒரு வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் Ctrl + 0 தொடக்கம் Ctrl + 9 வரையான Keyboard இன் குறுக்கு விசைகளை பயன்படுத்தி மிக விரைவாக சொற்களை உள்ளிட முடியும். இதற்கு Settings பகுதியில் தரப்பட்டுள்ள Macro Settings என்பதன் மூலம் மிக விரைவாக உள்ளிட வேண்டிய சொற்களை தீர்மானித்துக் கொள்ளலாம்.

இவைகள் தவிர இன்னும் பல்வேறு வசதிகளை இதன்மூலம் பெற முடிகின்றது.

எனினும் சற்று பெரிய திரைகளை கொண்ட Smart சாதனங்களுக்கே இது அதிகம் பொருத்தமானது என்பதும் உங்கள் Android சாதனத்தை கிடையாக (Landscape) பயன்படுத்தும் போதே இதன் மூலம் சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்பதும் எமது கருத்து.

எது எப்படியோ Android 4.0 இயங்குதளத்தை கொண்ட அல்லது அதற்கு பின் வெளிவந்த எந்த ஒரு இயங்குதளத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்கும் அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது வெறும் 2.4 Mb அளவை மாத்திரமே கொண்டுள்ளது.


நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


மேலும் இதனையும் பார்க்க: கணினிகளுக்கான Win RAR மென்பொருளை தற்பொழுது Android சாதனத்திலும் பயன்படுத்தலாம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top