ஆரம்பத்தில் FACEBOOK தளம் மூலம் JPEG, PNG, BMP போன்ற சாதாரண புகைப்படங்களையே பகிர்ந்து கொள்ள முடிந்தது. என்றாலும் Facebook தளம் Animation GIF படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியையும் அண்மையில் வழங்கி இருந்தது.

அசைவூட்டம் படங்கள்


என்றாலும் ஏனைய புகைப்படங்களை போல் இதனை நேரடியாக Facebook தளத்துக்கு தரவேற்றும் போது அதில் அனிமேஷன் விளைவை காண முடியாது. மாறாக அதனை இணையத்தில் தரவேற்றிய பின் அதன் இணைப்பை Facebook தளத்தில் பகிர்வதன் மூலம் குறிப்பிட்ட படத்தில் அனிமேஷன் விளைவை அவதானிக்கலாம்.



அவ்வாறு நீங்கள் பகிரும் அனிமேஷன் விளைவுகளை கொண்ட படங்கள் நண்பர்களின் News Feed இல் தோன்றுகையில் குறிப்பிட்ட படத்தின் மத்தியில் GIF என்ற வட்டமிடப்பட்ட ஒரு அடையாளம் இருக்கும் அதனை அவர்கள் சுட்டினால் குறிப்பிட்ட படம் அனிமேஷன் விளைவை ஏற்படுத்தும்.

நீங்களும் அனிமேஷன் படங்களை Fcaebook தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

  • Google அல்லது Bing போன்ற தேடியந்திரங்கள் மூலம் அல்லது ஏனைய இணையதளங்களில் உள்ள உங்களுக்கு விரும்பிய அனிமேஷன் படம் ஒன்றினை தேடிப்பெருக.


தேவைப்படின் உதவிக்கு இதனையும் பார்க்க: Google, Bing போன்ற தேடியந்திரங்கள் மூலம் அனிமேஷன் படம் ஒன்றினை எவ்வாறு தேடிப்பெறலாம் 


  • பின் அதனை Right Click செய்து Copy Image URL என்பதை சுட்டுக.


அசைவூட்டம் படங்கள்



  • இனி நீங்கள் Copy செய்த இணைப்பினை Facebook தளத்தில் Status Update ஆக Past செய்து பகிர்ந்து கொள்ளலாம்.


அனிமேஷன் முகநூலில்


அவ்வளவுதான்....!

உங்கள் கணினியிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ இருக்கும் புகைப்படங்களை பகிர விரும்பினால் அதனை imgur தளத்துக்கு தரவேற்றிய பின்னர் அதன் இணைப்பை மேற்குறிப்பிட்ட வகையில் பேஸ்புக் தளத்தில் பகிரலாம்! 

மேலும் இதனையும் பார்க்க: Facebook தளம் மூலம் நண்பர்களுக்கு ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றினையும் அனுப்புவது எவ்வாறு?





Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top