கணினிகளுக்கான இயங்குதளம் என்றால் Windows என்பது போல் ஸ்மார்ட் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் Android என்றாகி விட்டது.

Android Home screen shortcut


எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் கவர்சிகரமான வசதிகளை தரும் ஏராளமான செயலிகளை இதன் மூலம் நிறுவி பயன்படுத்திக் கொள்ளவும் முடிவதால் இன்று அநேகமானவர்கள் Android சாதனத்தை தெரிவு செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.


மேலும் இன்றைய ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் Word, Excel, PowerPoint போன்ற ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளவும் பாடல்கள் கேட்கவும், திரைப்படங்களை பார்க்கவும், மின்னூல்களை வாசிக்கவும், என ஏராளமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடிகின்றது.

இவ்வாறு பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடிவதனால் எமது Android சாதனத்தில் மேற்குறிப்பிட்ட அத்தனை கோப்புக்களும் நிறைந்து காணப்படலாம்.

இதனால் எமக்கு தேவையான ஒரு கோப்பு ஒன்றினை அல்லது கோப்புறையை எளிதில் தேடிப்பெறுவது சற்று சிரமமான காரியமாகும். 

எனவே மிகவும் அவசியமானதும், அடிக்கடி பயன்படுத்தக்கூடியதுமான கோப்புக்களையும் (File) கோப்புறைகளையும் (Folder) ES File Explorer இன் உதவியுடன் எமது Android சாதனத்தின் Home Screen இல் இனைத்துக் கொள்வதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே இது போன்ற கோப்புக்களையும் கோப்புறைகளையும்  உங்கள் Android சாதனத்தின் Home Screen இல் இணைத்துக்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.


  • முதலில் ES File Explorer செயலியை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


ES File Explorer செயலியை தரவிறக்க: Download ES File Explorer 


  • பின் ES File Explorer திறந்து நீங்கள் Home Screen இல் இணைக்க விரும்பும் கோப்பினை அல்லது கோப்புறையை பெருக.


  • பின் அதனை தொடர்ச்சியாக சிறிது நேரம் அலுத்துக. (Tap & Hold)
Es file explorer  • இனி ES File Explorer இன் வலது கீழ் மூலையில் More எனும் ஒரு வசதி கிடைக்கும்.


android shortcut
  • பின் அதனை சுட்டும் போது தோன்றும் சிறிய சாளரத்தில் Add to desktop என்பதை சுட்டுக.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் தெரிவு செய்த கோப்பு அல்லது கோப்புறை Home Screen இல் இணைக்கப்பட்டிருக்கும். 
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top