பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவரை இன்று நினைத்த மாத்திரத்தில் மிக இலகுவில் தொடர்பு கொள்ளக் கூடியதாக உள்ளது.

இலவச கணினி அழைப்பு


இதற்கு Whatsapp, Viber, skype, Line, Wechat போன்ற ஏராளமான சேவைகள் எமக்கு உதவுகின்றது.

தற்பொழுது அந்த வரிசையில் அறிமுகமாகிறது Toky எனும் சேவை.


இதனை பயன்படுத்துவதற்கு தொடர்பு கொள்பவரிடம் Toky செயலி இருந்தால் மாத்திரம் போதுமானது. மாறாக தொடர்பு கொள்ளும் இரு சாதனங்களிலும் இந்த செயலி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதனை பயன்படுத்துவதோ மிகவும் இலகு. இந்த செயலியை உங்கள் Smart சாதனத்துக்கு தரவிறக்கிக் கொண்டதன் பின் உங்கள் Facebook கணக்கை பயன்படுத்தியோ அல்லது உங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு கணக்கொன்றினை  உள்ளிடுவதன் மூலம் கணக்கொன்றினை உருவாக்கிக் கொள்ள முடியும்.

பின் உங்களுக்கான ஒரு இணைய இணைப்பு கிடைக்கும்.

உதாரணத்திற்கு உங்கள் பெயர் ராஜா எனின் toky.co/Raja என்றவாறான ஒரு இணைய இணைப்பு கிடைக்கும். பின் அதனை உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் ஒரு சில நொடிப் பொழுதுகளில் அழைப்பினை ஏற்படுத்தி உரையாட முடியும்.

இணையத்தில் toky


நீங்கள் வழங்கும் வழங்கும் இணைப்பை Google Chrome, Firefox, Opera போன்ற எந்த ஒரு இணைய உலாவியிலும் உள்ளிட்டு அழைப்புக்களை மேற்கொள்ள முடிவதுடன் இதற்கு உங்கள் Mobile சாதனங்களில் உள்ள இணைய உலாவிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் இதனை Chrome இணைய உலாவிகளில் பயன்படுத்துவதற்கான நீட்சியும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் Smart சாதனங்களுக்கு பதிலாக இந்த நீட்சியை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் இதன் மூலம் இருவேறு கணினிகளுக்கிடையில் அழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்,

மேலும் உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துபவர்கள் எவ்வித கணக்குகளை உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பது இனிப்பான விடயம் அல்லவா?


நீங்கும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Toky For Android

Install toky Extension For Google Chrome

மேலும் இதனையும் பார்க்க: 90 இற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள எந்த ஒரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் இலவச அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் மென்பொருள் (Android, iOS)

புகைப்பட உதவி: Dreamstime

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top