ஆரம்பத்தில் இணைய உலாவி என்றாலே அதிகமானவர்கள் அறிந்து வைத்திருந்தது Microsoft இன் Internet Explorer இணைய உலாவியையே ஆகும்.
ஆனாலும் அதற்குப் பின் வெளிவந்த Google இன் கூகுள் குரோம் Firefox மற்றும் Opera போன்ற இணைய உலாவிகளானது Internet Explorer பயனர்களை தனது வேகத்தின் மூலமும் வெவ்வேறுபட்ட வசதிகளின் மூலமும் பங்கு போட்டுக் கொண்டன.


அந்த வகையில் இன்றைய இணைய உலகின் முதல்வன் நீயா? நானா? போட்டி போட்டுக் கொண்டு இணைய உலாவிகள் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இன்று கூகுள் குரோம் இணைய உலாவியை அதிகமானவர்கள் பயன்படுத்தி வந்தாலும் கூட Firefox இணைய உலாவிக்கு என ஒரு வட்டாரம் இருக்கவே செய்கின்றது.

எது எப்படியோ நீங்களும் Firefox இணைய உலாவியை கணினியில் பயன்படுத்துபவர் எனின் இந்த பதிவு உங்களுக்காகத் தான்.

அண்மையில் Firefox இணைய உலாவிக்கு புதியதொரு தோற்றம் வழங்கப் பட்டிருந்தமையை நாம் அறிவோம் அல்லவா?

அதில் உள்ள Menu பகுதியினை எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி தரப்பட்டிருந்தது.

தற்பொழுது இதன் அண்மைய பதிப்பில் Menu பகுதியில் இணைத்துக் கொள்ள என Forget எனும் ஒரு வசதியும் தரப்பட்டுள்ளது.

இதனை உங்கள் Toolbar பகுதியில் இணைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் கடைசி ஐந்து நிமிடங்களுக்குள் அல்லது கடைசி 2 மணித்தியாலங்களுக்குள், அல்லது கடைசி 24 மணித்தியாலங்களுக்கு இணையத்தை உலா வந்தவைகள் தொடர்பில் உங்கள் இணைய உலாவியில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் நீக்கிக் கொள்ள முடியும்.

Forget Button ஐ நீங்களும் உங்கள் Firefox இணைய உலாவியின் Toolbar பகுதியில் இணைத்துக்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

  • Firefox இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுக.

Firefox menu


  • பின் தோன்றும் சாளரத்தில் Customize என்பதனை சுட்டுக.
  • இனி Forget எனும் ஒரு புதிய Button தரப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

firefox இணைய உலாவி


  • இனி அதனை Tool Bar இற்கு Drag & Drop செய்க.
  • பின் Exit என்பதை அழுத்தி வெளியேறுக.

அவ்வளவு தான்.

firefox forget on tool bar


இனி Toolbar இல் இருக்கும் Forget எனும் Button ஐ சுட்டுவதன் மூலம் நீங்கள் இணையத்தை இறுதியாக பயன்படுத்திய அனைத்து தகவல்களையும் நீக்கிக் கொள்ள முடியும்.

இதனையும் பார்க்க: 64-Bit கணினியில் மிக வேகமாக இயங்கும் WaterFox இணைய உலாவி (Web Browser)

Love to hear what you think!

1 comments:

 
Top