வேகமாக இயங்கும் இன்றைய உலகில் நாம் ஒன்றை செய்தால் இன்னுமொன்றை மறந்து விடுகின்றோம் அல்லவா?

இருந்தாலும் பிரச்சினை என ஒன்று இருக்கும் போது தீர்வொன்றும் இருக்கத்தானே செய்கின்றது.அந்தவகையில் நாம் மேற்கொள்ளக்கூடிய அன்றாட செயற்பாடுகளை முழுமையாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்வதற்கு பல்வேறு உபாயங்களை பபயன்படுத்தலாம்.


இதனடிப்படையில் இன்று அனைவரது கைகளிலும் வலம் வரும் Smart சாதங்களிலும் கூட இதற்கான வசதி புகுத்தப்பட்டுள்ளது.

இதற்கென ஏராளமான செயலிகள் இருந்தாலும்
Polite Remainder எனும் செயலியானது சிறந்த வசதிகளை தருகின்றது.

இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு செயலை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் செய்வதற்கு உங்களை நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ளவும் தானியக்கமாக குறுந்தகவல் ஒன்றினை அனுப்புவதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை செய்வதற்கு இன்னுமொருவரை ஞாபகப்படுத்தவும் முடியும்.

இந்த செயலியில் தரப்பட்டுள்ள Add எனும் Button ஐ அழுத்துவதன் மூலம் நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள  வேண்டிய விடயங்களை உள்ளிடலாம்.


ஞாபகப்படுத்தும் செயலி  Android Polite Reminder


Add Button ஐ அழுத்தும் போது தோன்றும் சிறிய சாளரத்தில் Just Me, Others, Both என பிரதான மூன்று பிரிவுகள் தரப்பட்டிருக்கும்.

இதில் Just Me என்பதன் மூலம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்களுக்கு ஞாபகப் படுத்துமாறு அமைத்திடலாம். அதே போல் Others எனும் பகுதி மூலம் குறிப்பிட்ட நபரின் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விடயத்தை செய்வதற்கு தானியக்க குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புவதன் மூலம் இன்னுமொருவருக்கு குறிப்பிட்ட விடயத்தை ஞாபகப் படுத்தலாம்.

Polite செயலி Reminder Android செயலி


மேலும் இதில் தரப்பட்டுள்ள Both எனும் பகுதி மூலம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விடயத்தை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளும் அதே வேலை குறிப்பிட்ட விடயத்தை இன்னுமொருவருக்கும் ஞாபகப் படுத்தலாம்.

மேலும் மேற்குறிப்பிட்ட முறையில் நீங்கள் வெவ்வேறு விடயங்களை உள்ளிடுகையில் குறிப்பிட்ட விடையத்தை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மாத்திரம் ஞாபகப்படுத்த செய்ய முடிவதோடு அதனை நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம், வருடாந்தம் ஞாபகப்படுத்த செய்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

Remainder தமிழ் Androidஉதாரணத்திற்கு உங்கள் நபர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு அவர்களின் பிறந்த நாளன்று குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தானியக்க முறையில் ஒரு வாழ்த்துச்செய்தியை அனுப்ப முடிவதோடு அதனை உங்களுக்கும் ஞாபகப்படுத்த செய்யலாம்.இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Download Polite Remainder For Android

மேலும் இதனையும் பார்க்க: உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பதிந்து கொள்ள உதவும் Smart சாதனங்களுக்கான அருமையான ஒரு மென்பொருள் (இணையத்தினூடாகவும் அணுகலாம்)

Image Credit: registrar-hotmail

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top