எமது Android சாதனத்தில் இருக்கும் புகைப்படங்கள், ஆவணங்கள், Audio மற்றும் வீடியோ கோப்புக்கள் போன்றவற்றினை நிர்வகிப்பதற்காக ஒவ்வொரு Android சாதனத்திலும் File Manager செயலிகள் தரப்பட்டிருக்கும்.இந்த File Manager மூலம் எமது Android சாதனத்தில் இருக்கக் கூடிய கோப்புக்களை மிக இலகுவாக தேடிப்பெற்றுக் கொள்ளவும் புதிய கோப்புறைகளை உருவாக்கிக் கொள்ளவும் அவற்றினை நீக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு Rename செய்யவும் என ஏராளமான செயற்பாடுகளை செய்ய முடியும்.
இருப்பினும் Android சாதனத்தில் தரப்பட்டிருக்கும் File manager செயலியையும் விட மூன்றாம் நபர் File Manager செயலிகள் மூலம் அதிக வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் தமிழ் மொழி ஆதரவுடன் கூடிய ES File Explorer செயலியை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம். அல்லவா? 

அதே போன்ற ஆனால் அதனை விட சற்று வித்தியாசமான வசதிகளை தருகின்றது Cabinet எனும் செயலி.

எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இதன் மூலம் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள முடிகிறது.

  • இந்த செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Customize Button ஐ சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Internal Storage எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தின் உள்ளக நினைவகத்தில் உள்ள கோப்புக்களை நிர்வகிக்க முடிவதுடன் exSDCard எனும் பகுதி மூலம் உங்கள் SD Card இல் உள்ள கோப்புக்களை நிர்வகிக்கலாம்.  • Internal Storage, exSDCard என்பதை தொடர்ந்து வரும் பகுதியில் எமது புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கும் கோப்புக்களை மிக விரைவில் கையாளும் வகையில் DCIM, Download, Music, Pictures போன்ற கோப்புக்கள் தரப்பட்டுள்ளது. (மேலே படத்தில் உள்ளவாறு)
  • அத்துடன் இதன் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Customize பகுதியில் உள்ள Filter என்பதன் மூலம் Audio, Video, Text, Image, Archive என உங்களுக்கு தேவையான ஒன்றினை மாத்திரம் தேடி பெற்றுக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது இதன் மூலம் நேர விரயம் இன்றி நீங்கள் தேடும் கோப்பு ஒன்றினை மிக விரைவில் தேடிப்பெற முடியும்.
  • அதற்கு கீழ் தரப்பட்டுள்ள Grid Size எனும் பகுதி மூலம் குறிப்பிட்ட செயலியில் தோன்றும் கோப்புக்கள் மற்றும் கோப்புறைகளினை வெவ்வேறு அளவுகளுக்கு அதன் தோற்றத்தினை மாற்றிக் கொள்ள முடியும்.
  • மேலும் அதே பகுதியில் தரப்பட்டுள்ள Hidden Files என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் மறைந்திருக்கும் கோப்புக்களையும் தோன்றச் செய்ய முடியும்.
கவனத்திற்கு: இவ்வாறு மறைந்த நிலையில் இருக்கும் கோப்புக்கள் Android இயங்குதளம் இயங்குவதற்கு தேவையான கோப்புகளாகவும் இருக்கலாம் எனவே அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம்.

  • அத்துடன் குறிப்பிட்ட ஒரு கோப்பு அல்லது கோப்புறை தொடர்பான அனைத்து தகவல்களை அறிந்து கொள்ளவும் அவற்றினை Zip வடிவத்திற்கு சுருக்கிக் கொள்ளவும் அதனை Home Screen  இல் இணைத்துக் கொள்ளவும் அதனை Bookmark செய்வதன் மூலம் உடனடியாக திறந்து கொள்ளவும் என ஏராளமான வசதிகள் இதில் தரப்பட்டுள்ளது.
  • இவைகள் தவிர இந்த செயலியின் மூலம் பட்டியல் படுத்தப்படும் கோப்புக்களை அதன் பெயரின் அடிப்படையில் (A-Z), அளவின் அடிப்படையில், மற்றும் உருவாக்கப்பட்ட திகதியின் அடிப்படையில் பட்டியல் படுத்த முடிவதுடன் கோப்புறைகளை முதலில் தோன்றும் வகையிலும் கோப்புக்களை அதற்குக் கீழ் தோன்றும் வகையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.
  • இவைகள் அனைத்திற்கும் மேலாக உங்களுக்குத் தேவையானவற்றை இலகுவில் தேடிப் பெற்றுக் கொள்ளும் வகையில் Search வசதியும் தரப்பட்டுள்ளது.
  • மேலும் இதன் Settings பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இன்னும் பல பயனுள்ள வசதிகளை பெற முடிகின்றது. உதாரணத்திற்கு ஒரு கோப்புறையினை பார்ப்பதன் மூலம் அதற்குள் எத்தனை கோப்புக்கள் உள்ளன எத்தனை கோப்புறைகள் உள்ளன என்பதனையும் அறிந்துகொள்ள முடியும். அதே போல் குறிப்பிட்ட File Manager செயலியின் நிறம், அதன் எழுத்துக்களின் வர்ணம் மற்றும் கோப்புக்கள்/கோப்புறைகளின் வர்ணங்கள் போன்ற வற்றினையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடியும்.

இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை உங்கள் Android சாதனத்துக்கும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Download cabinet for Android

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top