இன்று அதிகமான செயற்பாடுகள் கணினி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதனை இயக்குவது அந்த செயற்பாட்டை தூண்டுவது நாமாகவே இருக்கின்றோம்.

இளைப்பாற ஒரு இணையதளம்

எனவே நாம் கணினி முன் அமர்ந்து தொடர்ச்சியாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நாம் இயல்பாகவே களைத்து விடுகிறோம் அல்லாவா?இது போன்ற சந்தர்பங்களில் எமக்கு சற்று ஓய்வு எடுக்க இணையத்தில் ஏராளமான தளங்கள் துணை புரிகின்றன. இதனை "தொல்லைகள் மறந்து ஒரு சில நிமிடம் ஓய்வெடுக்க உதவும் அழகிய இணைய தளங்கள்." எனும் பதிவு மூலம் ஏராளமான தளங்களை நாம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அந்த வகையில் Noisli எனும் இணையதளமும் எமது மனதுக்கு இதம் தரக்கூடிய இயற்கை ஒலிகளை கேட்டு மகிழ உதவுகின்றது.


மழை பொழிவது போன்ற ஓசை, நெருப்பு எரியும் போது ஏற்படும் ஓசை, காற்று வீசும் போது ஏற்படும் ஓசை, கடல் அலையின் ஓசை, நீர் துளிகள் அசையும் போது ஏற்படும் ஓசை என ஏராளமான இயற்கையின் அழகிய ஓசைகள் இதில் தரப்பட்டுள்ளது.

அத்துடன் தானாகவே நிறம் மாறக்கூடிய பின்புலப்படங்கள் இந்த தளத்தை மேலும் அலங்கரிக்கின்றது.

இதனை இணையத்தின் ஊடாக மட்டும் இன்றி iOS சாதனங்கள் மூலமாகவும் பயன்படுத்தலாம். இதன் Android சாதனத்துக்கான பதிப்பு மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது அது தொடர்பில் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தின் ஊடாகவோ +Tamilinfotech Google Plus பக்கத்தின் ஊடாகவோ தொடர்ந்தும் இணைந்திருங்கள்.அத்துடன் நீங்கள் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் இதற்கான நீட்சியை (Extension) உங்கள் இணைய உலாவிக்கு நிறுவிக்கொள்ளவும் முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பின் நீங்கள் விரும்பும் ஓசைகளை தானாகவே ஒலிக்கச் செய்யலாம்.

Noisli Andoid iOS செயலி


Google Chrome நீட்சி மூலமாகவோ அல்லது iOS சாதனம் மூலமாகவோ நீங்கள் இதனை முதன் முதலாக பயன்படுத்துகையில் இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு கணக்கொன்றினை ஆரம்பிக்க வேண்டும் அல்லது உங்கள் Google, Facebook கணக்குகளை பயன்படுத்தி உள்நுழைந்து கொள்ளலாம்.


Visit Noisli Web App

Download Noisli For iPhone or iPad ($1.99)

Download Noisli For Google Chrome (Extension)Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top