இது வரை ஒரு முன்னோட்ட பதிப்பாகவே ((Insider Preview) இருந்து வந்த விண்டோஸ் 10 இயங்குதளம் இன்று (29/7/2015) உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளம்


இதற்கு முன் Microsoft Windows இன் Windows XP, Windows Vista, Windows 7, Windows 8/8.1 என பல்வேறு பட்ட பதிப்புக்களை அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பே Windows இன் இறுதிப் பதிப்பாக அமையும் என Microsoft நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட Windows 10 இன் முன்னோட்ட பதிப்பை (Insider Preview) இன்று வரை கிட்டத்தட்ட 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பதிப்பானது 190 நாடுகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது Windows 7, Windows 8/8.1 இயங்குதளங்களின் முறையான பதிப்புக்களை (Genuine) பயன்படுத்தும் பயனர்களால் தமது Windows இன் பதிப்பை விண்டோஸ் 10 இற்கு இலவசமாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகைகள்: Windows 10 இயங்குதளத்தில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள்.

ஒன்றுக்கு மேற்பட்ட Desktop களை உருவாக்கி பயன்படுத்தும் வசதி, Cortana எனும் குரல் மூலம் தகவல்களை பெறுவதற்கான வசதி போன்ற வற்றுடன் மிக வேகமாக இயங்கக் கூடிய Microsoft Edge எனும் இணைய உலாவியும் இதில் தரப்பட்டுள்ளது.மேலும் அறிமுகப்படுத்தப்படும் கணினி, Tablets, மொபைல் சாதனங்கள், மற்றும் Raspberry Pi போன்றவற்றில் இயங்கக் கூடியதாக இருக்கும்.

Image Credit: Windows Blog

Love to hear what you think!

1 comments:

 
Top