வாட்ஸ்அப் இல்லாத மொபைல் சாதனங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு வாட்ஸ்அப் இன் சேவை பரந்து விரிந்துள்ளது.




இன்றைய உலகில் குறுந்தகவல் எனும் முறை முற்றிலுமாக மாறி வாட்ஸ்அப், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகளையே அனைவரும் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.


அண்மையில் வாட்ஸ்அப் சேவையை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதை அடுத்து அதில் குரல் அழைப்புக்களை மேற்கொள்ள வசதி வழங்கியதுடன் தொடர்ச்சியாக அதனை மேம்படுத்தி வந்தது.

அந்தவகையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வாட்ஸ்அப் இன் புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் இருந்த ஒரு சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன் Starred Messages எனும் புதிய வசதியும் தரப்பட்டுள்ளது.

 

புதிய மேம்படுத்தல்

(WhatsApp 2.12.338) 2015-NOV-24

புதிய பதிப்பில் தரப்பட்டுள்ள Starred Messages இந்த வசதியானது வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியதாக அமையும்.


இதன் மூலம் உங்கள் உறவினர்கள் நண்பர்களால் உங்களுக்கு அனுப்பப்படும் அல்லது குழுக்களில் (Groups) பகிரப்படும் மிகவும் முக்கியமான தகவல்களை "நட்சத்திர அடையாளம்" இட்டு அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி?

  • நீங்கள் நட்சத்திர அடையாளம் இட விரும்பும் ஒரு தகவலை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.

வாட்ஸ்அப் புதிய வசதிகள்

  • இனி வாட்ஸ்ஆப் இன் மேற்பகுதியில் தோன்றும் நட்சத்திர அடையாளத்தை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட தகவலுக்கு நட்சத்திர அடையாளத்தை இடலாம்.

வாட்ஸ்அப் புதிய பதிப்பு



  • இவாறு நட்சத்திர அடையாளம் இடப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு, வாட்ஸ்ஆப்  இன் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளாலான மெனு Button ஐ சுட்டும் போது தோன்றும் Starred Messages எனும் பகுதி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


எனவே வாட்ஸ்அப்  இல் பகிரப்படும் ஆயிரக்கணக்கான தகவல்களில் உங்களுக்குத் தேவையான தகவல்களை எவ்வித சிரமமும் பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக்கொள்ள முடியும் அல்லவா?

இதன் புதிய பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் புதுப்பிக்கப்படவில்லை எனவே பதிவின் கீழே தரப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் இந்த புதிய பதிப்பின் APK கோப்பை தரவிறக்கி அதனை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நிறுவுவதன் மூலம் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பு தற்பொழுது கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பை சுட்டுக.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்வறுவன வாட்ஸ்ஆப் இன் முன்னைய மேம்படுத்தல்கள் ஆகும் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை



முன்னைய மேம்படுத்தல்கள் 

(WhatsApp 2.12.303) 2015-OCT-09

இந்த மேம்படுத்தலில் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கில் உள்ள செய்திகள் (Chat), புகைப்படங்கள், வாட்ஸ்ஆப் மூலமாக உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புக்களின் விபரங்கள், வீடியோ கோப்புக்கள் என அனைத்தையும் உங்கள் கூகுள் டிரைவ் சேமிப்பகத்திற்கு தரவேற்றிக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.


இவ்வாறு கூகுள் டிரைவ் இணைய சேமிப்பகத்திற்கு தரவேற்றுவதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் தரவுகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடிவதுடன் உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டாலும் கூட உங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களை கூகுள் டிரைவ் இணைய சேமிப்பகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

அதே போல் நீங்கள் புதியதொரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தத் துவங்கியிருந்தால் முன்னைய ஸ்மார்ட் போனில் இருந்த உங்கள் அனைத்து வாட்ஸ்ஆப் தகவல்களையும் கூகுள் டிரைவ் சேமிப்பகத்தில் இருந்தே மிக இலகுவாக புதிய ஸ்மார்ட் போனிற்கு பெற்றுக் கொள்ள முடியும்.


இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி?


  • வாட்ஸ்ஆப் செயலியின் Settings ===> Chat and calls ===> Chat backup எனும் பகுதியின் மூலம் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ள முடியும். 


  • குறிப்பிட்ட பகுதியில் தரப்பட்டுள்ள Back up to Google Drive என்பதை சுட்டுவதன் மூலம் எவ்வாறான கால இடைவெளிக்கு ஒரு தடவை Backup செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யலாம். 
  • இந்த பகுதியில் தரப்பட்டுள்ள Never என்பதை தெரிவு செய்தால் இந்த வசதி முடக்கி வைக்கப்படும்.

  • Only when i tap "Back up" என்பதை தெரிவு செய்வதன் மூலம் "நாம் Back Up Button ஐ சுட்டும் போது மட்டுமே Backup செய்யப்படும்.

  • அதே போல் Daily, Weekly அல்லது Monthly என்பவற்றில் ஒன்றை தெரிவு செய்வதன் மூலம் நாம் தெரிவு செய்த கால இடைவெளிக்கு ஒரு தடவை தானாகவே Backup இடம்பெறும்.

  • அத்துடன் Settings ===> Chat and calls ===> Chat backup எனும் பகுதியில் Google Drive Settings என்பதற்குக் கீழ் தரப்பட்டுள்ள Account என்பதன் மூலம் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து கொள்ள வேண்டும். 

  • மேலும் குறிப்பிட்ட பகுதியில் Back up Over என்பதை சுட்டுவதன் மூலம் Wi-Fi இணைப்பு கிடைக்கும் போது மாத்திரம் Back Up செய்யப்படல் வேண்டுமா? அல்லது Wi-Fi மற்றும் சாதாரண இணைய இணைப்பு கிடைக்கும் இரு சந்தர்பங்களிலும் Back Up செய்யப்படுதல் வேண்டுமா? என்பதை தெரிவு செய்யலாம்.

  • அத்துடன் வீடியோ கோப்புக்களும் Back Up செய்யப்பட வேண்டும் எனின் Include Videos என்பதில் Tick செய்ய வேண்டும். 


முன்னைய மேம்படுத்தல்கள்.

(WhatsApp 2.12.194) 2015-JUN-29

  • Custom Notification
இதன் புதிய பதிப்பில் Custom Notification எனும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் Notification களை நிர்வகிப்பதற்கு என மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ளது.


அதாவது குறிப்பிட்ட நபர் ஒருவரிடம் இருந்து அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவில் இருந்து வரக்கூடிய செய்திகளை மாத்திரம் வேறாக அறிந்து கொள்ளும் வகையில் அந்த நபருக்கு அல்லது குழுவுக்கு என தனியான Ring Tones, Vibrate, Popup Notification போன்றவைகளை அமைத்துக் கொள்ள முடியும்.

  • Mark As Unread 

அத்துடன் Mark As Unread எனும் வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதியானது Whatsapp இல் பெறப்பட்ட செய்தி ஒன்றை நாம் ஏற்கனவே படித்து விட்டாலும் அதனை இது வரை படிக்கப்படாத ஒரு செய்தி போல் தோன்றச் செய்வதற்கான வசதி ஆகும்.

  • Low Data usage

மேலும் இதன் புதிய பதிப்பில் Low Data usage எனும் வசதியும் தரப்பட்டுள்ளது இந்த வசதி மூலம் குறைந்த அளவிலான தரவுப் பாவனையில் குரல் அழைப்புக்களை மேற்கொள்ளலாம்.




(மேற்குறிப்பிட்ட பக்கத்தின் மூலம் தரவிறக்கும் போது Goole Play என்பதற்கு அருகில் இருக்கும் Download Button ஐ சுட்டுக.)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top