நாம் அன்றாடம் பயன்படுத்தும் விண்டோஸ் கணினியில் நாமறியாத எத்தனையோ வசதிகள் இருப்பதனை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் எமது Windows கணினியில் இருக்கும் நாம் அறியாத ஏராளமான பல விடயங்களை எமது முன்னைய பதிவு மூலம் விளக்கியிருந்தோம்.

Character Map  விண்டோஸ் கணினி


அது போன்ற ஒரு அருமையான வசதியே கணினியில் இருக்கும் Character Map எனும் வசதியுமாகும்.

 இந்த வசதி மூலம் எமது கணினி Keyboard இல் தரப்படாத 2000 இற்கும் மேற்பட்ட குறியீடுகளை Copy செய்து எமக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதி கணினியிலேயே தரப்பட்டிருந்தாலும் அது மறைந்த நிலையில் இருப்பதனால் அதிகமானவர்கள் இதனை அறிந்ததில்லை எனினும் Numeric keyboard தரப்பட்டுள்ள Keyboard களில் Keyboard குறுக்கு விசைகளை பயன்படுத்தி Keyboard இல் இல்லாத பல குறியீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதனையும் பார்க்க: Keyboard தரப்படாத 1000 இற்கும் மேற்பட்ட குறியீடுகளை உங்கள் கணனியில் பயன்படுத்திக் கொள்வதற்கு உதவும் இலவச மென்பொருள்.

என்றாலும் ஏராளமான மடிக் கணினிகள் Numeric keyboard தரப் படாதவைகளாகவே அமைந்துள்ளன. எனவே குறிப்பிட்ட கணினிகளில் Keyboard குறுக்கு விசைகளை பயன்படுத்தி குறியீடுகளை உருவாக்குவது சிரமமான காரியமாகும்.

அத்துடன்  Numeric keyboard தரப்பட்டுள்ள Keyboard களில் கூட குறிப்பிட்ட ஒரு குறியீட்டினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனின் அதனை ஞாபகம் வைத்திருப்பதும் சிரமமான காரியம்.


எனவே உங்கள் கணினியில் இருக்கக் கூடிய Character Map ஐ திறந்து கொள்வதன் மூலம் உங்களுக்குத் தேவையான குறியீட்டினை மிக இலகுவாக தேடிப்பெற்றுக் கொள்ள முடிவதுடன் அவற்றினை Copy செய்து ஆவணங்களிலோ அல்லது Facebook நிலைதகவல்களிலோ பகிர்ந்து மகிழ முடியும்.

  • இதனை உங்கள் கணினியில் திறந்துகொல்வதற்கு Rum Program ஐ திறந்து charmap என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
(Win Key + R விசைகளை அழுத்துவதன் மூலம் Run Program ஐ திறந்துகொள்ளலாம்)

அவ்வளவுதான்...!இனி Character Map எனும் இடைமுகம் உங்கள் கணினியில் தோன்றும் பின் உங்களுக்குத் தேவையான குறியீடுகளை Copy செய்து உங்களுக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ள 
முடியும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top