இன்றைய Smart சாதனங்களின் வளர்ச்சியானது எதிர் காலத்தில் கணினி பாவனையை பெருமளவில் குறைத்து விடுமோ என எண்ணத் தோன்றுகின்றது.Android மற்றும் iOS சாதனங்களின் வருகைக்குப் பின்னர் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து விட்ட Smart சாதனங்களின் பாவனையானது இன்று அனைவரது கையிலும் ஒன்றுக்கு பதில் இரண்டு Smart சாதனங்கள் என வலம் வரத் துவங்கி உள்ளது. அதிலும் தற்போதைக்கு Android என்றால் சற்று வரவேற்பு அதிகம்.

எது எப்படியோ நீங்களும் Android சாதனத்தை பயன்படுத்துபவரா? அதனை நீங்கள் ஆவலுடன் பயன்படுத்துகையில் அது உங்கள் பொறுமையை சோதிக்கிறதா?

அதாவது அதன் வேகம் குறைந்துள்ளதா? குறைந்த வேகத்தில் இயங்கும் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தை வேகமாக இயங்கச் செய்வதற்கு  என நாம் Clean Master, Advance Mobile Care மற்றும் Power Cleaner போன்ற செயலிகளை எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

ஆனால் நாம் தற்போது கூறும் முறையோ சற்று வேறுப்பட்டது. இது உங்கள் Android ஸ்மார்ட் சாதனத்தில் தேங்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்குவதன் மூலமோ அல்லது பின்புலத்தில் இயங்கும் செயலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமோ உங்கள் Android சாதனத்தின் வேகத்தை அதிகரிக்காது.

மாறாக உங்கள் Android சாதனத்தில் தோன்றக்கூடிய சாளரத்தின் வேகமானது Android சாதனங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இதில் சிறியதொரு மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் Android சாதனத்தினை வேகமாக இயங்கச் செய்ய முடியும்.

இதனை நீங்களும் மேற்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

  • உங்கள் Android சாதனத்தில் Settings பகுதிக்கு செல்க
  • பின் General எனும் பிரிவுக்குக் கீழ் உள்ள Developer Option என்பதை சுட்டுக.(உங்களால் Developer Option எனும் ஒரு பகுதியை காண முடியாவிட்டால் About Device என்பதில் Build number என்பதை தொடர்ச்சியாக ஏழு தடவை சுட்டுக.)
  • இனி Developer Option எனும் பகுதிக்கு சென்று Windows Animation Scale, Transition Animation Scale மற்றும் Animator Animation Scale என்பவைகளில் உள்ள 1x என்பதை 0.5x ஆக மாற்றி விடுக.

அவ்வளவுதான். 

இனி உங்கள் Android சாதனத்தின் சாளரங்கள் கடு கதி வேகத்தில் தோன்றுவதை அவதானிக்கலாம்.Love to hear what you think!

3 comments:

 
Top