இணையத்தின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாரிக் கொள்வதற்கும் என இணையத்தின் ஊடாக வழங்கப்படும் சிறந்த சேவைகளுள் Skype வழங்கும் சேவையும் ஒன்றாகும்.

Skype 5.5 android செயலி


Microsoft நிறுவனத்தால் நிருவகிப்படும் இந்த சேவையானது அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இதன் சேவையினை கணினி மென்பொருள் மூலமும் Android, iOS, Windows Phone போன்ற Smart சாதனங்கள் மூலமாகவும் பெற முடிவதுடன் நேரடியாக இணையத்தின் மூலம் பெறுவதற்கான வசதியையும் அண்மையில் Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

அந்த வகையில் இதன் Android Smart சாதனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் முன்னைய பதிப்பினையும் விட மேம்படுத்தப்பட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • இதன் புதிய பதிப்பானது உங்கள் Android சாதனத்தில் இயங்கும் போது குறைந்த அளவான Battery இன் சக்தியையே எடுத்துக்கொள்ளும். எனவே இந்த புதிய பதிப்பை நிறுவுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தின் Battery ஐ நீடித்து உழைக்க செய்ய முடியும்.
  • மேலும் இதன் Notification வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் உங்கள் User Name மற்றும் Password போன்றவற்றினை சேமித்து வைக்கும் வசதியும் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் Skype கணக்கில் இருந்து வெளியேறிய பின் மீண்டும் உள்நுழைய Username, Password போன்றவைகளை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. 

(இருப்பினும் இந்த வசதி உங்களுக்கு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை எனின் Settings ====> Privacy பகுதிக்கு சென்று இந்த வசதியை முடக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது)

Skype 5.5 android


  • அத்துடன் நீங்கள் Skype செயலியின் ஊடாக பகிர்ந்து கொள்ளும் இணைய இணைப்புக்களை சிறிய இடைமுகத்தில் தோன்றும் வகையில் Link Preview வசதியும் இந்த பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் புதிய பதிப்பை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Download Skype For Android


Sources: Skype Blog 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top