கணினி மற்றும் இன்றைய Smart சாதனங்களை நாம் தொடர்ச்சியாக பயன்பபடுத்துகையில் அதில் இருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் காரணமாக எமது கண்கள் களைத்து விடுவதை உணர்கிறோம் அல்லவா?

கண் பாதுகாப்பு


இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடிக்கும் போது எமது கண்கள் காலப்போக்கில் பரிதபத்துக்குள்ளான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். 

எனவே நாம் சற்று கவனமாக செயற்படுவதன் மூலம் இது போன்ற நிலைமைகளில் இருந்து விடுபடலாம்.
இன்று கணினிக்கு பதிலாக அதிகமானவர்கள் Smart சாதனங்களை பயன்படுத்த துவங்கியுள்ளதால் இதன் இதற்கான செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

நீங்களும் உங்கள் Smart சாதனத்தினை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்ட பிரச்சினையை எதிர்நோக்குபவர் எனின் உங்களுக்கு உதவுகின்றது Screen Filter எனும் Android சாதனங்களுக்கான செயலி.


  • இதனை முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன் இதனை பயன்படுத்துவதும் இலகு.
  • இதனை நிறுவிய பின் குறிப்பிட்ட செயலியை நாம் ஒரு முறை சுட்டினால் மாத்திரம் போதும் அது உங்கள் Android சாதனத்தில் இருந்து வெளிப்படும் அளவுக்கு அதிகமான ஒளியை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாக்கும்.
  • இந்த செயலி செயற்படுத்தப்பட்டதன் பின் அது உங்கள் Android சாதனத்தில் இருந்து வெளிப்படும் குறிப்பிட்ட அளவான ஒளியினை கட்டுப்படுத்தும் அதனை நீங்கள் மேலும் கூட்டவோ குறைக்கவோ நினைத்தால் Notification Panel இல் தோன்றும் அதன் iCon ஐ சுட்டுவதன் மூலம் உங்களுக்கு தேவையான அளவில் அதனை நிர்வகிக்கலாம்.

Screen Filter செயலி Screen Filter Android

நீங்களும் இதனை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Screen Filter For Android


Image Credit: Firmoo

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top