ஆரம்பத்தில் மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் Yahoo நிறுவனம் முதலிடத்தில் இருந்தாலும் தற்பொழுது அந்த நிலைமை மாறி அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் சேவையாக Google இன் Gmail சேவை மாற்றம் பெற்றுள்ளது.இதற்கு Android சாதனங்களின் வருகையும் ஒரு முக்கிய காரணமாகும் என்றால் மறுப்பதற்கு இல்லை.அந்த வகையில் Gmail சேவையை பயன்படுத்தும் தனது தனது பயனர்களுக்கு அழகிய இடைமுகத்துடனும் அருமையான பல வசதிகளை பெறக்கூடிய வகையிலும் Inbox எனும் சேவையை Google நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

எனவே Gmail சேவையை பயன்படுத்துபவர்கள் அனைவராலும் https://inbox.google.com எனும் முகவரி ஊடாக Inbox எனும் புதிய தோற்றத்திலும் வசதிகளுடனும் அமைந்த சேவையை பயன்படுத்த முடிந்ததுடன் Smart சாதனங்களின் ஊடாக Gmail சேவையை பயன்படுத்துபவர்களுக்கு Inbox எனும் பிரத்தியோகமான செயலிகளை Google நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.


எனினும் நாம் Gmail மின்னஞ்சல் கணக்கினை திறந்து கொள்வதற்காக ஆரம்பத்தில் இருந்து பயன்படுத்தி வரும் https://mail.google.com எனும் முகவரியை உள்ளிடுகையில் Gmail இன் முன்னைய தோற்றமே தோன்றும். 

இருப்பினும் Gmail மின்னஞ்சல் கணக்கிற்கான https://mail.google.com எனும் முகவரியை உள்ளிடுகையில் Inbox இன் புதிய தோற்றம் தோன்ற வேண்டும் எனின் அதற்கும் வசதி உண்டு.

இந்த வசதியை நீங்களும் பெற வேண்டும் எனின் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

  • முதலில் https://inbox.google.com எனும் முகவரியில் சென்று உங்கள் Username மற்றும் Password என்பவைகளை உள்ளிட்டு உங்கள் Gmail கணக்கிற்கு உள் நுழைந்து கொள்க.
  • பின் தோன்றும் புதிய Inbox இடைமுகத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுக.

 Redirect Gmail to inbox.google.com மின்னஞ்சல்  • இனி தோன்றும் பகுதியில் Settings என்பதனை சுட்டுக.
  • பின்னர் தோன்றும் சிறிய சாளரத்தில் Other என்பதை சுட்டிய பின் Redirect Gmail to inbox.google.com என்பதில் Tick செய்து Done என்பதை அலுத்துக.

அவ்வளவு தான்.

இனி நீங்கள் https://mail.google.com எனும் முகவரியை உள்ளிட்டாலும் உங்களுக்கு Inbox இன் புதிய இடைமுகமே கிடைக்கும்.மேலும் இதனையும் பார்க்க: அனுப்பிய மின்னஞ்சல் சென்றுவிடாமல் தடுப்பது எப்படி? (Web, iOS, Android)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top