இணையத்தின் ஊடாக எமது புகைப்படங்களை அலங்கரித்துக்கொள்ள உதவும் FotoFlexer, Adornpi, போன்ற இணையதளங்களை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

Photofunia image editor


அதே போல் Photofunia எனும் இணையதளம் மூலமாகவும் உங்கள் புகைப்படங்களுக்கு வெவ்வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தி அவற்றினை அலங்கரித்துக் கொள்ள முடியும்.400 இற்கும் மேற்பட்ட தோற்றங்களுக்கு உங்கள் புகைப்படங்களை மாற்றித்தரும் இந்த தளமானது எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளதுடன் எந்த ஒருவரினாலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இந்த தளத்தின் மூலம் உங்கள் புகைப்படம் பத்திரிகையில் வெளிவதிருப்பது போன்றும், சஞ்சிகைகளில் வெளிவந்திருப்பது போன்றும், பெரும் கட்டிடங்களில் உங்கள் புகைப்படம் தொங்க விடப்பட்டிருப்பது போலவும், சுவரொட்டிகளில் இணைக்கப்பட்டிருப்பது போலவும் என இன்னும் ஏராளமான தோற்றங்களுக்கு உங்கள் புகைப்படங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

Photofunia photo editor


மேலும் புகைப்படங்கள் மாத்திரம் அல்லாது நீங்கள் விரும்பும் எழுத்துக்களையும் இதன் மூலம் அலங்கரித்துக்கொள்ள முடியும். 

Photofunia விளைவுகள்


உதாரணத்திற்கு உங்கள் பெயர் துணியில் தைக்கப்பட்டிருப்பதை போலவும், கடற்கரையில் எழுதப்பட்டிருப்பதை போலவும், மரத்தில் எழுதப்பட்டிருப்பது போலவும், விளம்பரப் பலகைகளில் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது போலவும் என பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

இணையத்தில் எழுத்துக்களை அலங்கரிக்க


இந்த தளத்துக்குச் சென்று நீங்கள் விரும்பும் ஒரு தோற்றத்தை தெரிவு செய்ததன் பின் உங்கள் கணினியில் உள்ள புகைப்படத்தை இந்த தளத்துக்கு தரவேற்றுவதன் மூலமோ அல்லது இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Web Cam இற்கான வசதி மூலம் புகைப்படம் ஒன்றினை எடுப்பதன் மூலமோ அல்லது இணையத்தில் உள்ள ஒரு படத்தின் இணைய முகவரியை உள்ளிடுவதன் மூலமோ குறிப்பிட்ட புகைப்படத்தை நீங்கள் தெரிவு செய்த தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.


அவ்வளவுதான்......

இனி அவற்றினை Right Click செய்வதன் மூலம் உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளவும் பின் அவற்றினை சமூக வலைதளங்களில் பகிர்வதன் ஊடாக உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து மகிழவும் முடியும்.நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்குச் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பினை சுட்டுக.

Visit Photofunia

மேலும் இதனையும் பார்க்க: உங்கள் அழகிய புகைப்படத்திற்கு மேலும் அழகு சேர்த்திட உதவும் அருமையான இணையதளங்கள் (Online Photo Editor)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top