One Plus நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட One Plus 1 எனும் ஸ்மார்ட் போன் ஆனது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து One Plus 2 எனும் Smart சாதனத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது One Plus நிறுவனம். 

OnePlus 2 Official தமிழ்

இந்த ஸ்மார்ட் போன் ஆனது நினைவகத்தின் அடிப்படையில் இரு வேறு பதிப்புக்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இயங்குதளம் மற்றும் திரை

  • இரண்டு பதிப்புக்களும் Android 5.1 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் OxygenOS எனும் இயங்குதளத்தை தன்னகமாக கொண்டிருப்பதுடன் 5.5 inch Full HD திரையை கொண்டுள்ளது.

Camera

  • Selfie புகைப்படங்களை பிடிப்பதற்கும் 3 அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் ஏற்றவாறான 5 megapixel திறனுடைய முன்பக்க Camera ஐ இவைகள் கொண்டுள்ளதுடன் LED flash வசதியுடன் கூடிய 13 Megapixel பிரதான Camera ஐ கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் 4K video எனும் அது உச்ச தெளிவுத்திறனில் அமைந்த வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும்.

ஏனைய வசதிகள் 

  • WiFi மற்றும் 4G LTE, Bluetooth, GPS, fingerprint sensor போன்ற வசதிகளை கொண்டுள்ள இது இரண்டு SIM (Dual SIM) அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதியையும் தன்னகமாக கொண்டுள்ளது.

விலை 

  • இவற்றின் விலைகள் முறையே 16GB பதிப்பு 22999 இந்திய ரூபாவும் 64GB பதிப்பு 24999 ரூபாவும் ஆகும்.


Sources: OnePlus

  

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top