கணினியில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு உங்கள் கண்களை பாதிப்பதாக உணர்கிறீர்களா?


அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Night Mode எனும் இணைய உலாவிக்கான நீட்சி. 


இந்த நீட்சிகளை உங்கள் Google Chrome, Firefox உங்கள் இணைய உலாவிகளில் நிறுவுவதன்  மூலம் நீங்கள் இணையத்தை உலாவரும் அதே வேலை உங்கள் கண்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


கணினியில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாக்கும் மென்பொருள் ஒன்றை நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம். இருந்தாலும் இந்த இணைய உலாவிக்கான நீட்சியில் அதில் இருந்தும் சற்று வேறுபட்ட வசதிகள் தரப்பட்டுள்ளன.

நீட்சி Night Mode Page Dim


Google Chrome இணைய உலாவிக்கான நீட்சியில் Night Mode, Day Mode என இரு பகுதிகள் தரப்பட்டுள்ளன இதன் மூலம் கணினியின் திரையில் இருந்து வெளிப்படும் மிதமிஞ்சிய ஒளியினை உங்கள் கண்களுக்கு போதுமான அளவில் வைத்து கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் Firefox இணைய உலாவிக்கான நீட்சியானது சற்று வேறு பட்ட வசதிகளை கொண்டுள்ளது.

நீங்களும் இதனை பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பு மூலம் உங்கள் இணைய உலாவிகளுக்கு நிறுவிக்கொள்ள முடியும்.


மேலும் இதனையும் பார்க்க: Wikipedia தளத்தை புத்தம்புதிய தோற்றத்தில் பார்க்க வேண்டுமா? அப்படியானால் இதனை வாசியுங்கள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top