எமது Android சாதனத்திற்கு நாம் நிறுவும் Launcher, Icons Packs, மற்றும் Wallpaper போன்றவற்றுக்கான செயலிகளின் ஊடாக எமது Android சாதனத்தின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்ள முடியும். 

Muzei Android Live Wallpaper செயலி


அந்த வகையில் உங்கள் Android சாதனத்துக்கு அழகிய தோற்றத்தை கொடுக்கும் அருமையான பல Icons Pack செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்று உங்கள் Android  சாதனத்துக்கு அழகிய தோற்றத்தை கொடுப்பதற்கு  Live Wallpaper செயலிகளும் உதவுகின்றது.

இதனடிப்படையில் Muzei எனும் Android Live Wallpaper செயலியானது அன்றாடம் புதுப்புது பின்புலப்படங்களை உங்கள் Android சாதனத்துக்கு இட்டுக்கொள்ள உதவுகின்றது.


  • அன்றாடம் ஓவிய வடிவில் அமைந்த பின்புலப்படங்களை தானாகவே உங்கள் Android சாதனத்துக்கு நிறுவும் இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தில் இருக்கும் புகைப்படங்களையும் இதில் இணைத்துக்கொள்ள அனுமதிக்கின்றது.
Muzei INTERFACE

  • மேலும் நீங்கள் உங்கள் Android சாதனத்தில் இருந்து தெரிவு செய்யும் பின்புலப்படங்கள் எத்தனை மணித்தியாலத்துக்கு ஒரு தடவை அல்லது எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை தானாக மாற வேண்டும் என்பதனை தெரிவு செய்து கொள்ள முடியும்.
Muzei wALLPAPER

  • அத்துடன் இந்த செயலி மூலம் உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் தோன்றும் புகைப்படங்களின்  Blur, Dim, Grey போன்றவற்றினை எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் மாற்றி அமைத்திடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த Wallpaper செயலியை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Muzei For Android


மேலும் இதனையும் பார்க்க: தனித்த வர்ணங்களில் அமைந்த பின்புலப்படங்களை Android சாதனத்தில் பயன்படுத்திக் கொள்ள உதவும் செயலி 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top