MomentCam எனும் Smart சாதனங்களுக்கான செயலியானது உங்களது அல்லது உங்கள் நண்பர்களினது புகைப்படங்களை பல சுவாரஷ்யமான தோற்றங்களுக்கு மாற்றித்தருகின்றது.

கேலிச் சித்திரங்களாக மாற்ற

நாம் அடிக்கடி பத்திரிகைகளில் காணும் கேலிச் சித்திரங்களை போல் உங்கள் புகைப்படங்களை மாற்றித்தரும் இது பல ஆயிரக்கணக்கான சுவாரஷ்யமான வடிவங்களுக்கு உங்கள் புகைப்படங்களை மாற்றிக் கொள்ள உதவுகின்றது.


குறிப்பிட்ட செயலி மூலம் உங்களது புகைப்படங்களை பிடிப்பதன் மூலமோ அல்லது ஏற்கனவே பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இந்த செயலிக்கு உளிடுவதன் மூலமோ அவற்றை அட்டகாசமான தோற்றங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
  • புகைப்படத்தில் உள்ள உங்களது அல்லது உங்கள் நண்பரினது தோற்றத்தினை அப்படியே வெளிப்படுத்தும் வகையில் அனிமேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ள முடியும்.
  • குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவரின் தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதனை மேலும் சுவாரஷ்யமானதாக உருவாக்கிக் கொள்ளும் வகையில் அதன் தலைமுடியின் தோற்றம் கண் விழிகளின் தோற்றங்களை மாற்றி அமைக்க முடிவதுடன், வெவ்வேறு வகையான உணர்சிகளை வெளிப்படுத்தும் வகையில் மகிழ்ச்சி, துக்கம், கோபம் போன்ற பல்வேறு தோற்றங்களுக்கு அதனை மாற்றிக்கொள்ள முடியும்.


கேலிச் சித்திரங்களாக மாற்ற Android செயலி Momentcam android iOS


  • நீங்கள் உருவாக்கும் கேலிச் சித்திரங்களை கருப்பு, வெள்ளை நிறங்களில் மாத்திரம் அல்லாது பல வர்ணங்களை கொண்ட அழகிய தோற்றங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
  • இவைகள் தவிர நீங்கள் உருவாக்கும் கேலிச் சித்திரங்களை மேலும் வேடிக்கையானதாக அமைத்துக் கொள்ள அவைகள் நினைப்பதை போலவும் கருத்துக்களை கூறுவது போலவும் Text Bubble கள் மற்றும் ஓட்டுக்கள் (Stickers) போன்றவற்றினையும் அவற்றுக்கு இணைத்துக் கொள்ள முடியும்.
  •  நீங்கள் உருவாக்கும் கேலிச் சித்திரங்களை உங்களது Android சாதனத்தில் சேமித்துக் கொள்ளவும் அவற்றினை Facebook, Google Plus, Whatsapp போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்துமகிழவும் முடியும்.

உலகளாவிய ரீதியில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த செயலியானது எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீங்களும் இதனை உங்கள் Smart சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download MomentCam For Android

Download MomentCam For iOS


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top