எமது கணினி வன்தட்டினை பல்வேறு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும் அவற்றின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் அதன் ஆங்கில எழுத்தை (Driver Letter) மாற்றிக் கொள்ளவும் Windows கணினியிலேயே வசதி தரப்பட்டிருந்தாலும் அவற்றினை மூன்றாம் நபர் மென்பொருள்களை பயன்படுத்தி செய்யும் போது அதனை மிக இலகுவாக மேற்கொள்ள முடிவதுடன்  Windows கணினியில் தரப்படாத மேலதிக வசதிகளையும் பெறமுடியும்.

MiniTool Partition Wizard

அந்தவகையில் MiniTool Partition Wizard எனும் மென்பொருளானது எமது கணினி வன்தட்டினை நிர்வகிப்பதற்கு என எராளமான வசதிகளை தருகின்றது.

இந்த மென்பொருள் மூலம் பின்வரும் வசதிகளை பெற முடியும்.

 • Resize/Move - உங்கள் கணினி வன்தட்டின் ஒரு பாகத்தின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவதுடன் அவற்றினை நகர்த்த முடியும்.
 • Create/Delete/Format - வன்தட்டில் புதிய ஒரு பாகத்தினை உருவாக்கவும் அதனை நீக்கவும் முடிவதுடன் குறிப்பிட்ட பாகத்தில் உள்ள தரவுகளை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
 • Merge Partition - இரு வேறு பாகங்களை ஒன்றிணைக்க முடியும்.
 • Split - குறிப்பிட்ட ஒரு பாகத்தினை வெவ்வேறாக பிரித்துக் கொள்ள முடியும்.
 • Partition/Disk Copy- கணினியில் உள்ள வன்தட்டின் குறிப்பிட்ட ஒரு பாகத்தினை copy செய்து கொள்ள முடியும்.
 • Convert Disk - Dynamic வகையில் உள்ள வன்தட்டின் பாகத்தினை Basic முறைக்கு மாற்றிக்குள்ள முடிவதுடன் Basic வகையில் அமைந்துள்ள பாகத்தினை Dynamic முறைக்கு மாற்றிக்கொள்ளவும் முடியம்.
 • Convert File System - NTFS முறையில் அமைந்திருக்கும் வன்தட்டின் பாகத்தினை FAT முறைக்கும் FAT முறையில் அமைந்திருக்கும் வன்தட்டின் பாகத்தினை NTFS வகிக்கும் மாற்ற முடியுமான அதே வேலை MBR ஐ GPT இற்கும் GPT ஐ MBR இற்கும் மாற்றிக்கொள்ள முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளின் சாதாரண சந்தை பெறுமதி 39 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


இருப்பினும் பின்வரும் இணைப்பின் மூலம் குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கிக் கொள்ள முடிவதுடன் அதற்கான இலவச Licencee Key ஐயும் பெற்றுக்கொள்ள முடியும்.

Download MiniTool Partition Wizard Professional Edition 9.0


உதவிக்குறிப்புகள்: 

 • இங்கு வன்தட்டு என்பது Hard Disk ஆகும். 
 • கணினி தொடர்பில் போதிய பரீட்சயம் அற்றவர்கள் கணினி பற்றி சற்று அனுபவம் உள்ளவரின் உதவியை பெறுவது சிறந்தது.
 • பெரும்பாலான வன்தட்டுகள் Basic வடிவில் அமைந்திருப்பதுடன் குறைந்த அளவான வந்தட்டுகளே Dynamic வடிவில் அமைந்திருக்கும்.
 • Basic வன்தட்டுக்களை சாதரணமாக நன்கு பகுதிகளாவே பிரிக்க முடியும். அவ்வாறு பிரிக்கப்படும் வன்தட்டின் பாகங்கள் Primary Partition மற்றும் Logical Partition என இரு வகைப்படும்.
 • Basic வகையில் அமைந்த ஒரு கணினி வன்தட்டில் ஆகக் கூடியது மூன்று Primary Partition களையே உருவாக்க முடியும். இருப்பினும்  Logical வகையில் அமைந்த பாகத்தினை சிறு சிறு பாகங்களாக பிரிக்க முடியும்.
 • Primary Partition வடிவில் அமைந்த பாகங்களில் மாத்திரமே இயங்கு தளங்களை நிறுவ முடியும்.
 • Dynamic வகையில் அமைந்த வன்தட்டின் பாகத்தினை Simple, spanned, striped, mirrored, மற்றும் RAID-5  எனும் முறைகளில் பிரிக்கலாம். 
 • Basic வகையில் அமைந்த வன்தட்டுக்களை போல் அல்லாது Dynamic  வகையில் அமைந்த வன்தட்டினை எத்தனை எத்தனை பகுதிகளாகவும் பிரித்துக் கொள்ளலாம்.
 • இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான போதிய விளக்கம் குறிப்பிட்ட தளத்தில் வீடியோ வடிவிலும் எழுத்து ரீதியாகவும் விளக்கப்பட்டுள்ளது. (இதற்கான இணைப்பு குறிப்பிட்ட மென்பொருளின் ஒவ்வொரு சாளரத்திலும் தரப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு உங்கள் கணினியில் உள்ள ஒரு பாகத்தினை பல்வேறு பகுதிகளாக பிரிக்க வேண்டும் எனின் குறிப்பிட்ட பாகத்தினை தெரிவு செய்து Split என்பதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தின் இடது கீழ் பகுதியில் உள்ள Partition Tutorial என்பதனை சுட்டுவதன் மூலம் அதற்கான உதவியினை இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top