சாதாரண புகைப்படங்களை விடவும் GIF (Graphics Interchange Format) வடிவில் அமைந்த அசைவூட்டம் கொண்ட புகைப்படங்களானது அதிக விளக்கத்தை தரக்கூடியவைகள் ஆகவும் உயிரோட்டம் உடையவைகளாகவும் அமைத்துள்ளன.

பூக்கள்


இது போன்ற அசைவூட்டம் (Animation) கொண்ட புகைப்படங்களை Google Plus சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதுடன் அண்மையில் Facebook தளமும் இவ்வாரன படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை வழங்கி இருந்தது.எனினும் நாம் தேடியந்திரங்களின் ஊடாக புகைப்படங்களை தேடிப்பெறும் போது .jpeg .png, .bmp போன்ற சாதாரண வடிவில் அமைந்த புகைப்படங்களையே தேடிப்பெற முடிகின்றது. 

என்றாலும் தேடியந்திரங்களின் ஊடாக Gif வடிவில் அமைந்த படங்களை மாத்திரம் தேடிப்பெறுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளன.


அனிமேஷன் படங்கள்


நீங்கள் பயன்படுத்துவது Google தேடியந்திரம் எனின் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

  • Google தளம் மூலம் நீங்கள் பெற விரும்பும் அனிமேஷன் படம் ஒன்றின் குறிச்சொல்லை (Keyword) தட்டச்சு செய்து தேடுக.
  • இனி முடிவுகள் தோன்றும் பக்கத்தில் Images ===> Search Tools ===> Types என்பதில் உள்ள Animated என்பதனை சுட்டுவதன் ஊடாக அசைவூட்டம் கொண்ட படங்களை மாத்திரம் தேடிப்பெற முடியும்.
  • தேவை எனின் அவற்றினை Right Click செய்வதன் மூலம் உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.நீங்கள் பயன்படுத்துவது Bing தேடியத்திரம் எனின் தேடல் முடிவுகள் பெறப்படும் பக்கத்தில் Image ===> Type என்பதில் Animated GIF என்பதனை சுட்டுக.

அவ்வளவுதான்....!

மேலும் இதனையும் பார்க்க: Bing HD Wallpaper களை எவ்வாறு தரவிறக்கலாம்?

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top