அன்றாடம் இணையத்தை பயன்படுத்தும் நாம் அதன் மூலம் ஏராளமான பல பயனுள்ள செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றோம் அல்லவா?அந்த வகையில் பல பயனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மாத்திரம் இன்றி பல சுவாரஷ்யமான, வேடிக்கையான மற்றும் பொழுது போக்கிற்கான இணையதளங்களையும் இன்றைய இணைய தளங்கள் கொண்டுள்ளன.


இதனையும் பார்க்க: கண்களை பரிசோதிக்க உதவும் இணையதளம்

இந்த சுவாரஷ்யமான இணையதளங்களுள் ஒன்றாக How-Old Net எனும் இணையதளத்தை உருவாக்கி உள்ளது Microsoft நிறுவனம்.

இந்த தளத்தின் மூலம் உங்களின் வயதை கணித்துக்கொள்ள முடியும். How-Old Net எனும் இணையதளத்துக்கு சென்று Upload Your Own Photo என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் இருக்கக் கூடிய உங்களது அல்லது உங்கள் உறவினர் நண்பர்களது புகைப்படங்களை இந்த தளத்துக்கு தரவேற்றுவதன் மூலம் அந்த படத்தில் இருக்ககூடியவர்களது வயதினை கணித்துக்கொள்ள முடியும். மேலும் படத்தில் உள்ள முகம் ஒரு ஆணின் முகமா? பெண்ணின் முகமா? என்பதனையும் இது வெளிப்படுத்துகின்றது.மேலும் பயன்படுத்தி பார்ப்பதற்காக இந்த தளத்தில் ஒரு சில புகைப்படங்களும் தரப்பட்டுள்ளது நீங்கள் விரும்பினால் அவற்றினையும் பயன்படுத்திப்பார்க்கலாம்.

Microsoft நிறுவனத்தால் நிருவகிப்படும் இந்த இணையத்தளமானது நீங்கள் தரவேற்றும் புகைப்படங்கள் சேமிக்கப்படாமல் உடனடியாக நீக்கப்பட்டு விடும் என தெரிவிக்கின்றது. எனவே எவ்வித அச்சமும் இன்றி உங்கள் புகைப்படங்களை இதில் தரவேற்றி பரிசோதித்துப் பார்க்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தின் மூலம் பெறப்படும் முடிவுகள் முற்றிலுமாக சரியானது என கூறுவதற்கு இல்லை இருப்பினும் தெளிவான புகைப்படங்களை தர்வேற்றுகையில் ஓரளவு சரியான முடிவுகளை பெற முடிகிறது.நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.மேலும் இதனையும் பார்க்க: இணையத்தில் இடம்பெறும் சுவாரஷ்யமான தகவல்களை அறிந்துகொள்ள Kaspersky வடிவமைத்துள்ள இணையதளம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top