நாம் கணினியை பயன்படுத்தும் போது அடிக்கடி Keyboard ஐ பயன்படுத்துவோம் அல்லவா?

Keyboard Indicator

இதில் ஏராளமான விசைகள் (Keys) தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றும் வெவ்வேறான பயன்களை தரக் கூடியவைகளாகும்.

அந்த வகையில் Keyboard இல் தரப்பட்டுள்ள Scroll Lock, Number Lock, Caps Lock விசைகளும் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய விசைகளாகும்.

இதில் Scroll Lock விசையை இன்று நாம் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும் Number Lock, Caps Lock ஆகிய நாம் அடிக்கடி பயன்படுத்துண்டு.



  • Number Lock விசையை நாம் இயக்கிய நிலையில் வைத்திருக்கும் போது Keyboard இன் வலது பக்கத்தில் தரப்பட்டிருக்கும் இலக்கங்களை கணினியில் உள்ளிட முடியும் அது முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இலக்கங்களை உள்ளிட முடியாது.
  • Caps Lock விசையை நாம் இயக்கிய நிலையில் வைத்திருக்கும் போது கணினியில் ஆங்கில பெரிய எழுத்துக்களையே உள்ளிட முடியும். இது முடக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆங்கில சிறிய எழுத்துக்கள் உள்ளிடப்படும்.


எனவே இந்த Scroll Lock, Number Lock, Caps Lock ஆகிய விசைகள் இயக்கப்பட்ட நிலையில் உள்ளதா? அல்லது முடக்கப்பட்ட நிலையில் உள்ளதா? என்பதனை அறிந்து கொள்ளும் வகையில் Keyboard உடன் Led Light தரப்பட்டிருக்கும்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக சில Keyboard களில் இந்த Led Light வசதி தரப்பட்டிருக்க மாட்டாது. அல்லது அவைகள் இயங்காது இருக்கும். 

இது போன்ற சந்தர்பங்களில் உங்கள் கணினியின் Scroll Lock, Number Lock, Caps Lock ஆகிய விசைகள் இயக்கப்பட்ட நிலையில் உள்ளதா? அல்லது முடக்கப்பட்ட நிலையில் உள்ளதா? என்பதனை அறிந்து கொள்ள உதவுகின்றது Keyboard Indicator எனும் மென்பொருள்.




இதனை உங்கள் கணினியில் நிறுவிய பின் இவைகள் உங்கள் கணினியின் Task Bar இல் வந்து அமர்ந்து கொள்ளும் பின் நீங்கள் மேற்குறிப்பிட்ட விசைகளை பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் சிறியதொரு ஒலி எழுப்பப்படுவதுடன் Task Bar இல் உள்ள அவற்றின் நிறங்களும் மாற்றம் அடைவதை அவதானிக்கலாம்.


நீங்கள் Windows 7/8/8.1 ஆகிய இயங்குதளங்களை பயன்படுத்துபவர்கள் எனின் அவைகள் Task Bar இனுள் மறைக்கப்பட்டு விடலாம் இதனை Task Bar இல் தோன்றச் செய்ய வேண்டும் எனின் Task Bar இல் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள சிறிய அம்புக்குறி அடையாளத்தினை சுட்டும் போது தோன்றும் சிறிய சாளரத்தில் Customize என்பதனை சுட்டுக.



பின் தோன்றும் சாளரத்தில் Keyboard Indicator (Scroll Lock), Keyboard Indicator (Scroll Lock), Keyboard Indicator (Scroll Lock) ஆகிய மூன்றுக்கும் Show icon and notification என்பதை தெரிவு செய்து OK அலுத்துக.


அவ்வளாவு தான் இனி அவைகள் உங்கள் Task Bar இல் தோன்றும்.

மேலும் இதனையும் பார்க்க: Keyboard தரப்படாத 1000 இற்கும் மேற்பட்ட குறியீடுகளை உங்கள் கணனியில் பயன்படுத்திக் கொள்வதற்கு உதவும் இலவச மென்பொருள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top