எமது கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் வன்பொருள்களை (Hardware) கணினி இயங்குதளத்துடன் ஒத்திசைய செய்வதற்கு Driver மென்பொருள்கள் இன்றி அமையாத ஒன்றாகும்.

DriveTheLife இலவச கணினி மென்பொருள்


உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் வன்பொருள்களுக்கு பொருத்தமான Driver மென்பொருள்கள் உங்கள் கணினியில் நிறுவப்படாமல் இருந்தால் குறிப்பிட்ட வன்பொருள் சாதனத்தை உங்களால் கணினியுடன் இணைத்து பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படலாம். அல்லது அதனை பயன்படுத்துகையில் ஏராளமான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • உங்கள் கணினில் இருந்து ஒலி(Sound) வெளிவர வில்லையா? 
  • Printer மூலம் ஆவணங்களை அச்சிட முடியவில்லையா? 
  • உங்கள் Smart சாதனத்தை Bluetooth மூலம் கணினியுடன் தொடர்பு படுத்த முடியவில்லையா? 
  • அல்லது உங்கள் USB Drive சாதனம் ஒன்றை உங்கள் கணினியில் பயன்படுத்த முடியாதுள்ளதா? 
  • கணினியின் திரையில் உள்ள எழுத்துக்கள், iCon கள் என அனைத்தும் பெரிதாக தோன்றுகின்றதா? 
  • கணினி தொடர்ச்சியாக மந்த கதியில் இயங்குகின்றதா? இது போன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது இந்த Diver மென்பொருள்களே ஆகும்.

இவைகள் கணினியில் நிறுவப்படாமல் இருக்கும் போது, அல்லது சேதம் அடையும் போது, இல்லையெனில் அவைகள் காலாவதியாகிவிடும் போது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புள்ளது.

எனவே உங்கள் கணினியில் தவறவிடப்பட்ட, சேதமடைந்த அல்லது காலாவதியாகிய Driver மென்பொருள்களை இனங்கண்டு அவற்றினை புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றது DriveTheLife எனும் Windows கணினிகளுக்கான இலவச மென்பொருள்.

கணினியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது எந்த ஒரு சாதாரண கணினியிலும் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளில் பிரதானமாக நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு.

  • Overview - இதன் முகப்புப் பக்கமே இதுவாகும் உங்கள் கணினியில் Driver மென்பொருள்கள் தொடர்பான குறைபாடுகள் இருந்தால் இந்த பகுதி மூலம் அறிந்து கொள்ளவும் அவற்றினை உடனடியாக சரிசெய்து கொள்ளவும் முடியும்.

  • Download- இந்த பகுதியில் உங்கள் கணினியில் காலாவதியாகி இருக்கும் மென்பொருள்கள் காண்பிக்கப்படும். இதன் மூலம் உங்களுக்குத் தேவையான Driver மென்பொருள்களை தெரிவு செய்து புதுப்பித்துக்கொள்ள முடியும்.
DriveTheLife கணினி மென்பொருள்

  • USB - USB ஐ பயன்படுத்தி உங்கள் கணினியுடன் இணைக்கப்படும் வன்பொருள்களுக்குத் தேவையான Driver மென்பொருள்களில் குறைபாடுகள் இருந்தால் அது USB எனும் பகுதி மூலம் வெளிப்படுத்தப்படும்.

  • Manage - இந்த பகுதி மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள Driver மென்பொருள்களை Backup எடுத்துக் கொள்ளவும் Backup எடுத்தவைகளை மீள நிறுவிக்கொள்ளவும் கொள்ளவும், தேவைப்படும் போது Driver மென்பொருள்களை நீக்கிக் கொள்ளவும் முடியும்.

வெறும் 8.3MB அளவையே கொண்டுள்ள இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்வதும் இலகு.எனவே நீங்களும் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top