இன்றைய Smart சாதனங்களானது எமது தேவைக்கும், விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் அதன் Keyboard ஐ மாற்றி பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது.

Fleksy Keyboard android செயலி

அந்த வகையில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான செல்லினம் Keyboard செயலி மற்றும் தமிழில் தட்டச்சு செய்வதற்கான Google இன் Handwriting Keyboard என பல செயலிகளை எமது முன்னைய பதிவுகள் மூலம் நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்று Fleksy எனும் Keyboard செயலியும் Smart சாதனங்களுக்கான மிகவும் பிரபலமானதும் ஏராளமான வசதிகளை தரக்கூடியதுமான ஒரு செயலி ஆகும்.

  • இதனை 40 இற்கும் மேற்பட்ட அழகிய தோற்றத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதில் அழகிய பல Theme கள் தரப்பட்டுள்ளதுடன் Keyboard அளவினை கூட உங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்.
  • மிக வேகமாக தட்டச்சு செய்வதற்கு ஏதுமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது.
  •  மேலும் சுவாரஷ்யமான GIF படங்களையும் இதன் மூலம் இணைத்துக்கொள்ள முடிவதுடன் Stickers, Emoji, themes, Rainbow Key Pops. போன்ற பல்வேறு வசதிகளையும் உங்களின் தேவைக்கு ஏற்றாட் போல் இதனுடன் இணைத்துக்கொள்ள முடியும்.

இவைகள் தவிர இன்னும் ஏராளமான பல வசதிகளை தரக்கூடிய இந்த Keyboard செயலியானது ஆரம்பத்தில் 1.9 அமெரிக்க டொலர்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டி இருந்தது.

இருப்பினும் தற்பொழுது இதனை இலவசமாகவே அனைவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இதனை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Fleksy + GIF Keyboard For Android

Download Fleksy + GIF Keyboard For iOS


மேலும் இதனையும் பார்க்க: Android சாதனத்துக்கான மிகச்சிறந்த SwiftKey எனும் கட்டண Keyboard மென்பொருள் தற்பொழுது முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top