நாம் எமது Android சாதனத்தில் ஏராளமான செயலிகளை நிறுவி பயன்படுத்துவோம் அல்லவா?

Android Easy Uninstaller இலவச செயலி


அவ்வாறு எமது Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளுள் நாம் ஏராளமானவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தாலும் பெரும்பாலானவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துவதில்லை அல்லது அவற்றில் சிலவற்றினை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம்.
இவ்வாறு தேவையற்ற செயலிகள் எமது Android சாதனத்தில் அதிகரிக்கும் போது அவைகளுள் பெரும்பாலானவை பின்புலத்தில் (Background) இயங்குவதனால் எமது Android சாதனத்தின் சக்தி மிக விரைவில் தீர்ந்து விடுவதுடன் அவற்றின் நினைவகமும் மிக விரைவில் காலியாகி விடும்.

 எனவே நாம் எமது Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற செயலிகளை அவ்வப்போது கண்டறிந்து நீக்கிக் கொள்வதன் மூலம் மேற்கூறிய பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

எனவே இந்த செயற்பாட்டை மிக இலகுவாக செய்து கொள்ள உதவுகிறது  Easy Uninstaller எனும் Android சாதனங்களுக்கான செயலி.

நிறுவப்பட்ட செயலிகளை நீக்கிக் கொள்வதற்கு என Android இயங்குதளத்திலேயே வசதி தரப்பட்டிருந்தாலும் அதனை விட சிறந்த வசதிகளை  Easy Uninstaller எனும் செயலி மூலம் பெற முடிகின்றது.

இதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற முடியும்.

  • உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள தேவையற்ற அனைத்து செயலிகளையும் ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக்கொள்ள முடியும்.
  • அதிக மின்சக்தியை எடுத்துக்கொள்ளும் செயலிகளை கண்டறிந்து நீக்கிக் கொள்ள முடியும்.
  • நீங்கள் அன்றாடம் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் பயன்படுத்தாத செயலிகளையும் வெவ்வேறாக இனங்கண்டு கொள்ள முடியும்.
  •  Easy Uninstaller செயலியில் இருந்தவாரே நிறுவப்பட்டுள்ள ஒரு செயலியை துவக்கிக் கொள்ள முடியும்.
  • நிறுவப்பட்டிருக்கக் கூடிய செயலிகளை அவற்றின் பெயரின் அடிப்படையில், அளவின் அடிப்படையில் அல்லது அவைகள் நிறுவப்பட்ட திகதியின் அடிப்படையில் வகைப்பிரித்துக் கொள்ள முடியும்.
  • உங்கள் Android சாதனத்தின் நினைவகம் குறிப்பிட்ட ஒரு அளவை விட குறையும் போது அதனை உங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இதில் Notification வசதி தரப்பட்டுள்ளது.
  • நீங்கள் நீக்கிய செயலிகளின் பட்டியல் Uninstall History எனும் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றது இதன் மூலம் நீக்கிய செயலி மீண்டும் தேவைப்படுமானால் அதனை எவ்வித சிரமமும் இன்றி Google Play Store இலிருந்து உடனடியாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.மேலும் இதனையும் பார்க்க: Android சாதனங்களுக்கான Recycle Bin செயலி (Application)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top