ஆரம்பத்தில் போலல்லாது இன்றைய இணையமானது வெறும் தகவல்களை தேடிப் பெறுவதற்கு மாத்திரம் இன்றி பல பயனுள்ள வசதிகளை பெறவும் துணை புரிகின்றது.

eye test இணைய முகப்பு


இதன் அடிப்படையில் இன்றைய இணையமானது பல சுவாஷ்யமான விடயங்களுக்கும், எமது புகைப்படங்களை அழகு படுத்திக் கொள்ளவும். ஆவணங்களை நிர்வகிப்பதற்கும், கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கும், செய்தித் தாள்களை படிப்பதற்கும், வானொலி கேட்பதற்கும், தொலைக்காட்சி பார்பதற்கும் என ஏராளமான பல வசதிகளை பெற்றுக் கொள்ள உதவுகின்றது.இதற்கு சான்று பகரும் வகையில் வீட்டிலிருந்தவாறே தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் இணைய தளம்PDF ஆவணங்களை நிர்வகிப்பதற்கான இணைய தளம்ஆவணங்களின் வடிவத்தினை மாற்றிக் கொள்வதற்கு வசதிகளை வழங்கும் இணையதளம்இணையத்தின் ஊடாக இடம்பெறும் சுவாஷ்யமான தகவல்களை தருவதற்கான இணையதளம், புகைப்படங்களுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள உதவும் இணைய தளம்இலங்கை மற்றும் இந்திய தமிழ் செய்தித்தாள்களை இணையத்தில் பார்பதற்கான இணையதளம்தொல்லைகள் மறந்து ஒரு சில நிமிடம் ஓய்வெடுக்க உதவும் இணைய தளம் என ஏராளமான தளங்களை எமது முன்னைய பதிவுகள் மூலம் நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அந்த வகையில் இன்றைய இணையமானது மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை என்றே கூற வேண்டும் இதற்கு சான்று பகரும் வகையில் 
குறிப்பிட்ட ஒரு மருந்து தொடர்பாக விலாவாரியான தகவல்களை பெற உதவும் இணைய தளம் என்ற பதிவில் நாம் ஒரு பயனுள்ள இணையதளத்தினை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதுபோலவே  EYE TEST எனும் இணையத்தளமானது உங்கள் கண்களை இணையத்தின் ஊடாக சோதித்து அறிந்து கொள்ள உதவுகின்றது.

 • இதில் நோயாளி நீங்கள், வைத்தியர் குறிப்பிட்ட இணையதளம் மாத்திரமே இந்த இருவருக்கு மத்தியில் எவ்வித மருந்துகளோ, ஊசிகளோ வழங்கப்பட மாட்டாது. எனவே வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இங்கு இல்லை.
 • அத்துடன் பரிசோதனை முற்றிலும் இலவசம் என்பதுடன் பரிசோதனை மற்றும் அதன் முடிவுகள் மிகவும் சுவாரஷ்யமானது.


இந்த தளத்தின் மூலம் நீங்களும் உங்கள் கண்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பினால் பின்வரும் வழி முறைகளை பின்பற்றுக.

 • முதலில் EYE TEST எனும் தளத்திற்கு விஜயம் செய்க.
 • இனி அதில் நான்கு கட்டங்கள் தரப்பட்டிருக்கும். அதில் மூன்று கட்டங்கள் ஒரே நிறத்தில் இருக்க ஒரு கட்டம் மாத்திரம் சற்று வேறுபட்ட நிறத்தில் இருக்கும்.
 • அந்த வேறு நிறத்தில் இருக்கும் கட்டத்தை 15 செக்கன்களுக்குள் சரியாக தெரிவு செய்ய வேண்டியதே இந்த பரிசோதனை. நீங்கள் சரியாக தெரிவு செய்யும் ஒவ்வொரு தடவையும் தரப்படும் கட்டங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.
 • குறிப்பிட்ட கட்டத்தை தவறாக தெரிவு செய்ய தவறும் பட்சத்தில் 3 செக்கன்களை இழந்து விடுவீர்கள்.


இணையத்தின் ஊடாக கண்களை சோதிக்க


சரி பரிசோதனை முடிந்து விட்டது என்றால் அடுத்த கட்டம் முடிவுகள் வெளியாகும்.

 • நீங்கள் எடுக்கும் புள்ளிகள் 0 தொடக்கம் 4 வரை அமைந்திருந்தால் உங்கள் கண்கள் வௌவால் உடைய கண்களை ஒத்தது, இந்த முடிவு பெறப்பட்டால் உங்கள் கண்களில் குறைபாடுகள் உள்ளது.
 • நீங்கள் எடுக்கும் புள்ளிகள் 5 தொடக்கம் 9 வரை எடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் எலியின் கண்களை ஒத்தது. இந்த முடிவும் அவ்வளவு சிறந்தது என கூற முடியாது.
 • நீங்கள் எடுக்கும் புள்ளிகள் 5 தொடக்கம் 9 வரை எடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் நாயின் கண்களை ஒத்தது. (சாதாரணமானது)
 • நீங்கள் எடுக்கும் புள்ளிகள் 10 தொடக்கம் 14 வரை எடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் பூனையின் கண்களை ஒத்தது. (விருப்பத்துக்குரியது)
 • நீங்கள் எடுக்கும் புள்ளிகள் 15 தொடக்கம் 19 வரை எடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் புலியின் கண்களை ஒத்தது. (சிறந்தது)
 • நீங்கள் எடுக்கும் புள்ளிகள் 20 தொடக்கம் 25 வரை எடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் கழுகின் கண்களை ஒத்தது. (அதி சிறந்தது, இந்த இடத்துக்கு என்னை போன்ற ஒரு சிலரால் மாத்திரமே வர முடிகின்றது.  )குறிப்பிட்ட தளம் மூலம் நீங்களும் உங்கள் கண்களை ஒருமுறை பரிசோதிக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக. இந்த தளத்தினை Smart சாதனங்கள் ஊடாகவும் பயன்படுத்த முடியும்.மேலும் இதனையும் பார்க்க: சிறந்த ஒரு Android Smart Phone ஐ தெரிவு செய்துகொள்வதற்காக Google வடிவமைத்திருக்கும் இணையதளம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top