நீங்கள் கணினியை பயன்படுத்தி Android செயலிகளை உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிக்கொள்ள விரும்புகிறீர்களா?


Pure APK Install மென்பொருள் இடைமுகம்

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Pure APK Install மென்பொருள்.

இந்த மென்பொருளை உங்கள் Windows கணினியில் நிறுவிய பின் உங்கள் Android சாதனத்தை கணினியுடன் இணைப்பதன் மூலம் மிக இலகுவாக Android செயலிகளை உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிக்கொள்ள முடியும்.

அப்படியாயின் APK செயலிகளை எங்கிருந்து தரவிறக்குவது என கேட்கின்றீகளா?

இதற்கும் தீர்வை தருகின்றது Pure APK தளம்.

APK கோப்புக்களை தரவிறக்குவதற்கு என விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள  இணையத்தளத்துக்குச் சென்று உங்களுக்குத் தேவையான செயலிகளை பெயரை Search Bar இல் தட்டச்சு செய்து தேடுவதன் மூலமோ அல்லது அதற்கான Play Store இன் முகவரியை உள்ளிடுவதன் மூலமோ குறிப்பிட்ட செயலிகளின் APK கோப்புக்களை நேரடியாக உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.

பின் அவற்றினை Pure APK மென்பொருளை பயன்படுத்தி உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிக்கொள்ளலாம்.

Pure APK Install நிறுவல் இடைமுகம்


இதற்கு உங்கள் Android சாதனம் Root செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதனால் என்ன பயன் என்கிறீர்களா?

  • சில Android செயலிகளை நாம் Google Play Store இல் இருந்து தரவிறக்க முற்படும் போது அதனை உங்கள் நாட்டில் இருந்து தரவிறக் முடியாது என்ற வகையில் "This item isn't available in your country" எனும் செய்தி தோன்றும். எனினும் APK Pure மூலமாக அவற்றினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்திற்கு நிறுவிக்கொள்ள முடியும்.
  • உங்கள் கணினியில் இணையத்தை பயன்படுத்த முடியுமான அதேவேளை உங்கள் Android சாதனத்தில் இணையத்தை பயன்படுத்துவதற்கான வசதி இல்லாத போது மேற்குறிப்பிட்ட முறை பெரிதும் பயனளிக்கும்.
  • உங்கள் Android சாதனத்தின் மூலம் இணையத்தை தொடர்பு படுத்தி செயலிகளை நிறுவும் போது உங்கள் Android சாதனம் அதிக மின் சக்தியை எடுத்துக்கொள்ளும். எனவே மேற்குறிப்பிட்ட முறையில் நிறுவுவதன் மூலம் Android சாதனத்தின் Battery ஐ சேமித்துக் கொள்ளலாம்.

இதனையும் பார்க்க: உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான மென்பொருள்.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?

  • முதலில் குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினிக்கு நிறுவிக்கொள்க.
  • பின் APK Pure தளத்துக்குச் சென்று உங்களுக்குத் தேவையான செயலியின் APK கோப்பினை தரவிறக்கிக் கொள்க.
  • இனி உங்கள் Android சாதனத்தில் Settings ===> General ===> Developer Option எனும் பகுதிக்கு சென்று USB debugging என்பதை சுட்டுவதன் மூலம் அதனை Tick செய்து கொள்க. 
USB debugging Android சாதனத்தில் செயற்படுத்தல்

  • பின் உங்கள் Android சாதனத்தை கணினியுடன் இணைத்துக் கொள்க.
  • பின் நீங்கள் தரவிறக்கிய APK கோப்பினை Double Click செய்வதன் மூலமோ அல்லது APK Pure மென்பொருளில் Drag & Drop செய்வதன் மூலமோ உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிக்கொள்ளலாம்.

நிறுவும் போது குறிப்பிட்ட செயலி உங்கள் Android சாதனத்தின் உள்ளக நினைவகத்தில் சேமிக்கப்பட வேண்டுமா? அல்லது microSD நினைவகத்தில் சேமிக்கப்பட வேண்டுமா? என்பதனை தீர்மானித்துக் கொள்ள முடியும்.

குறிப்பு: 
  • கணினி மூலம் நிறுவும் போது உங்கள் Android சாதனம் Lock செய்யப்பட்டிருந்தால் நிறுவுதல் தடைப்படலாம். எனவே நிறுவுவதற்கு முன் உங்கள் Android சாதனத்தை Unlock செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் Android சாதனத்தில் Developer Option என ஒன்றினை அவதானிக்க முடியாவிட்டால் About Device என்பதில் இருக்கும் Build Number என்பதனை தொடர்ச்சியாக ஏழு முறை சுட்டுங்கள். Developer Option எனும் பகுதி கிடைக்கும். (Jelly been மற்றும் அதற்கு பின்னர் வெளிவந்த பதிப்புக்களில் இந்த வசதி மறைத்து வைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும்.)

இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலம் APK கோப்புக்களை தரவிறக்குவதற்கான தளத்துக்குச் செல்லலாம்.மேலும் இதனையும் பார்க்க: Bluetooth ஐ விட 200 மடங்கு வேகமாக தரவுகளை பரிமாறிக்கொள்ள உதவும் Smart சாதனங்களுக்கான செயலியும் கணினிக்கான மென்பொருளும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top