இன்று இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விடயம் என்றால் அது Widows 10 பற்றியதாகத்தான் இருக்க வேண்டும்.எதிர்வரும் 29 ஆம் திகதி வெளிவர இருக்கும் Windows 10 இன் உத்தியோகபூர்வ பதிப்பானது Home, Mobile, Pro, Enterprise, Education, Mobile Enterprise, மற்றும் IoT Core என வெவ்வேறான எழு பதிப்புக்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

Windows 7 மற்றும் Windows 8/8.1 ஆகியவற்றின் முறையான பதிப்புக்களை தற்பொழுது பயன்படுத்துபவர்களுக்கு Windows 10 ஐ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் Windows 10 இன் சோதனை பதிப்பை பயன்படுத்துபவர்களாலும் Windows 10 பதிப்பின் உத்தியோகபூர்வ பதிப்பை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஆரம்பத்தில் தகவல் வெளியாகி இருந்தது. என்றாலும் பின்னர் வெளியாகிய தகவல்களின் படி Windows 7 மற்றும் Windows 8/8.1 ஆகிய பதிப்புக்களை பயன்படுத்துபவர்களால் மாத்திரமே Windows 10 இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எது எப்படியோ வெளிவர இருக்கும் விண்டோஸ் 10 ஐ அனைத்து தொழில்நுட்ப பிரியர்களும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அதே வேலை Windows 10 இல் வர இருக்கும் Windows 10 Hero எனும் பின்புலப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

எனவே அதனை அனைவரும் ஆவலுடன் தரவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர். அது Window Logo ஐ கொண்ட கரு நீல நிறத்தை கொண்டமைந்திருந்தது.


தற்பொழுது அதனை வெவ்வேறு நிறங்களில் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றது ஒரு இணையதளம்.

குறிப்பிட்ட தளத்துக்குச் சென்று தரப்பட்டுள்ள சிறிய Button ஐ நகர்த்துவதன் மூலம் அதனை வெவ்வேறு நிறங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும் பின் 4K என்பதனை அழுத்துவதன் மூலம் அதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.


நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top