இன்று அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கான இயங்குதளம் என்றால் அது Windows இயங்குதளமே என்பதை யாராலும் மறுக்க முடியாது.அந்தவகையில் Microsoft நிறுவனம் Windows 98, Windows Me, Windows XP, Windows 7, Windows 8/8.1 என காலத்துக்குக் காலம் தனது Windows இன் மேம்படுத்தப்பட்ட பதிப்புக்களை அறிமுகப்படுத்தி வந்ததுடன் இதன் இறுதிப்பதிப்பன விண்டோஸ் 10 எதிர்வரும் 29 ஆம் திகதி வெளிவர இருக்கின்றமை நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயமாகும்.


எது எப்படியோ அன்றாடம் நாம் பயன்படுத்தி வரும் இந்த Windows இயங்குதளத்தில் ஏராளமான வசதிகள் தரப்பட்டிருந்தாலும் நாம் அறியாத இன்னும் பல வசதிகள் இதில் இருக்கவே செய்கின்றன.

அவ்வாறான சில வசதிகள் பின்வருமாறு..........


1. Keyboard விசையை பயன்படுத்தி திறக்கப்பட்டிருக்கும் மென்பொருள்களை மிக இலகுவாக நிர்வகிப்பது எவ்வாறு?

 • நாம் எமது கணினியில் திறக்கும் மென்பொருள்கள் ஒவ்வொன்றும் எமது கணினியின் Task bar இல் தோன்றும் அல்லவா? அவ்வாறான மென்பொருள்களை Keyboard விசைகளை பயன்படுத்தி மிக இலகுவாக நிர்வகிக்க முடியும்.

 • இதற்கு Win Key உடன் 1 தொடக்கம் 9 வரையிலான விசைகளை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் கணினியின் Task Bar இல் Start Menu இற்கு அடுத்து Google Chrome இணைய உலாவியும், அதற்கு அடுத்ததாக Firefox இணைய உலாவியும் இருந்தால். Win Key + 1 ஐ அழுத்துவதன் மூலம் Google Chrome இணைய உலாவியையும் Win Key + 2 ஐ அழுத்துவதன் மூலம் Firefox இணைய உலாவியையும் திறந்து கொள்ள முடியும்.
 • இது போன்று Win Key உடன் 1 தொடக்கம் 9 வரையிலான விசைகளை பயன்படுத்தி எந்த ஒரு மென்பொருளையும் நிர்வகிக்க முடியும்.


2. திறக்கப்பட்டிருக்கும் மென்பொருள் ஒன்றின் இன்னுமொரு சாளரத்தினையும் திறப்பதற்கு.

 • உங்கள் கணினியில் குறிப்பிட்ட ஒரு மென்பொருளை திறந்து பயன்படுத்துகையில் அதே மென்பொருளின் இன்னுமொரு சாளரத்தினையும் திறக்க வேண்டுமா?

 • உதாரணத்திற்கு உங்கள் கணினியில் Google Chrome இணைய உலாவி திறக்கப்பட்டிருக்கின்றது எனின் அதே இணைய உலாவியின் இன்னுமொரு சாளரத்தினையும் திறந்து கொள்ள வேண்டுமானால் Shift Key ஐ அழுத்தியவாறு Task Bar இல் இருக்கும் Google Chrome இணைய உலாவியினை சுட்ட வேண்டும். இதன் போது Google Chrome இணைய உலாவியின் இன்னுமொரு சாளரம் தோன்றும்.
 • இது போல் எந்த மென்பொருளினதும் இன்னுமொரு சாளரத்தை திறந்து கொள்ள வேண்டுமானால் மேற்கூறிய முறையை பயன்படுத்தலாம்.


3. உங்கள் கணினியில் ஒரு கோப்பு அல்லது கோப்புறை அமைந்திருக்கக் கூடிய இடத்தினை அறிய வேண்டுமா? • அப்படியாயின் குறிப்பிட்ட கோப்பினை அல்லது கோப்புறையினை Shift Key ஐ அழுத்தியவாறு Right Click செய்ய வேண்டும். பின் பெறப்படும் சாளரத்தில் Copy as path என்பதனை சுட்டுவதன் மூலம் அது உங்கள் கணினியில் அமைந்துள்ள இடத்தினை Copy செய்துகொள்ள முடியும்.

4. Send to Menu மூலம் அதிக வசதிகளை பெற வேண்டுமா?


 • பொதுவாக நாம் Right Click செய்யும் போது தோன்றும் Send To பகுதியில் Compressed zip folder, documents, Bluetooth (Device), Mail Recipient போன்ற வரையறுக்கப்பட்ட சில வசதிகளையே காண முடியும் எனினும் Shift Key ஐ அழுத்தியவாறு Send To Menu ஐ திறந்து பாருங்கள் அதில் ஏராளமான பிரிவுகள் தோன்றியிருப்பதனை அவதானிக்கலாம்.

5. கோப்புக்கள் மற்றும் கோப்புறைகளை Select, Copy, Cut, Past செய்வதற்கான Keyboard விசைகள்.

 • நாம் பொதுவாக ஆவணங்களில் உள்ள எண்கள் எழுத்துக்களை ஒரே நேரத்தில் தெரிவுசெய்து கொள்ள Ctrl+A விசையையும் அவற்றினை Copy, Cut மற்றும் Past செய்வதற்கு முறையே Ctrl+C, Ctrl+X, Ctrl+V போன்ற விசைகளை பயன்படுத்துவோம் அல்லவா? இதே முறையை பயன்படுத்தி கணினியில் உள்ள கோப்புக்கள் மற்றும் கோப்புறைகளை Select, Copy, Cut, Past செய்து கொள்ள முடியும்.

6. Mouse ஐ மாத்திரம் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை அல்லது கோப்புறைகளை தெரிவு செய்வது எவ்வாறு? • எமது கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை அல்லது கோப்புறைகளை தெரிவு செய்வதற்கு நாம் Ctrl விசையுடன் குறிப்பிட்ட கோப்புக்களை Mouse மூலம் தெரிவு செய்வோம் அல்லவா? இருப்பினும் பின்வரும் வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் Ctrl விசையின் உதவி இன்றி மிக இலகுவாக தேவையான கோப்புக்களை அல்லது கோப்புறைகளை தெரிவு செய்யலாம்.
 • இதற்கு உங்கள் கணினியில் Windows Explorer ஐ திறந்து View என்பதை சுட்டுவதன் மூலம் பெறப்படும் Item Check Boxes என்பதில் Tick செய்து கொள்க. இனி கோப்புக்களுக்கு அருகில் Cursor ஐ நகர்த்தும் போது சிறியதொரு கட்டம் (Check Box) தோன்றும் பின் அதனை சுட்டுவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை அல்லது கோப்புறைகளை ஒரே நேரத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.

7. உங்கள் கணினியில் திறக்கப்பட்டிருக்கும் மென்பொருள்களை கணினி திரைக்கு சரி பாதியாக பிரித்து இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டுமா? • Win Key உடன் Left arrow மற்றும் Win Key உடன் Right arrow விசைகளை பயன்படுத்திப் பாருங்கள் உங்கள் கணினியில் உள்ள இருவேறு மென்பொருள்களை கணினியின் திரைக்கு சரிபாதியாக பிரித்து பயன்படுத்தலாம்.

8. உங்கள் கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களுக்கு அல்லது கோப்புறைகளுக்கு ஒரே நேரத்தில் Rename செய்ய வேண்டி உள்ளதா? • அப்படியாயின் அவற்றினை தனித்தனியாக தெரிவு செய்து Rename செய்ய வேண்டிய அவசியம் இல்லை மாறாக அவைகள் அனைத்தையும் தெரிவு செய்த பின் F2 விசையை அழுத்துங்கள் இனி நீங்கள் விரும்பும் ஒரு பெயரினை அவற்றுக்கு தட்டச்சு செய்யுங்கள் இனி அவைகள் அனைத்தும் அதே பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும்.

9. நீங்கள் விரும்பும் Run Command ஐ பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு மென்பொருளை திறக்க முடியும்.

 • Windows கணினியில் தரப்பட்டுள்ள Run Program ஐ பயன்படுத்தி கணினியில் உள்ள ஏராளமான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் உங்கள் கணினியில் உள்ள எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் விரும்பும் Run Command ஐ பயன்படுத்தி திறக்க வேண்டும் எனின் நீங்கள் விரும்பும் வகையில் அவற்றுக்கு Run Command ஐ கொடுக்க முடியும்.


10. உங்கள் கணினியில் திறக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு மென்பொருள்களையும் Keyboard விசைகளை பயன்படுத்தி திறக்க வேண்டுமா? • அப்படியாயின் Alt key உடன் Tab விசைகளை அலுத்துக. இனி உங்கள் கணினியில் திறக்கப்பட்டிருக்கும் அனைத்து மென்பொருள்களும் சிறிய இடைமுகத்தின் ஊடாக தோன்றும். பின் Alt key + Tab விசைகளை தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை மிக இலகுவாக தெரிவு செய்து திறந்துகொள்ளலாம்.

11. உங்கள் கணினியில் இயங்கக்கூடிய மென்பொருள் ஒன்றை ஏனையவர்களால் திறக்க முடியாதவாறு அமைக்க வேண்டுமா?12. Task Bar இல் கிழமை நாட்களையும் தோன்றச் செய்வது எவ்வாறு?

 • பொதுவாக எமது Windows கணினியின் Task Bar மூலம் நேரம் மற்றும் திகதியினை மாத்திரமே பார்க்க முடியும் என்றாலும் திங்கள் முதல் ஞாயிறு வரையான கிழமை நாட்களையும் Task Bar இல் தோன்றச்செய்ய முடியும் 

13. உங்கள் கணினியில் இருக்கக் கூடிய கோப்புக்களுக்கும், கோப்புறைகளுக்கும் எவ்வித மென்பொருளையும் பயன்படுத்தாது கடவுச்சொல் இட்டு பாதுகாக்க வேண்டுமா?இவைகள் தவிர Windows கணினி மூலம் நாம் பெறக்கூடிய ஏராளமான வசதிகளை நாம் முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம் அவற்றுள் மேலும் ஐந்து பதிவுகள் பின்வருமாறு
பதிவு நீளமாகி விட்டது மன்னிக்க வேண்டும். பதிவு தொடர்பான உங்கள் கருத்துக்களையும் மிக ஆவலுடன் எதிர்பார்கிறம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top