இன்று Android சாதனத்துக்கான பல அருமையான செயலிகள் கிடைக்கின்றன அவைகளுள் ஏராளமானவைகள் இலவசமாகவே கிடைப்பதனால் நாம் அவற்றினை பயன்படுத்தாவிட்டாலும் தவறாமல் எமது Android சாதனத்தில் நிறுவி வைத்திருப்போம் அல்லவா?

Android Apps


இதனால் எமது Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளின் எண்ணிக்கை 25, 50, 100 என பல்கிப் பெருகி இருக்கும். அவற்றுள் அனைத்தையும் நாம் பயன்படுத்தாவிட்டாலும் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய Facebook, Play Store, Gmail, Google Translate போன்ற பல பயனுள்ள செயலிகள் இருக்கவே செய்யும்.

அத்துடன் சில செயலிகளை அவசரமாக பெற வேண்டி இருக்கும் ஆனால் எமது Android சாதனத்தில் ஏராளமான செயலிகள் நிருவப்பட்டிருப்பதனால் நாம் தேடிப்பெறுவது சற்று சிரமமான காரியமாக அமைந்து விடும்.

உதாரணத்திற்கு மிக விரைவில் நிறைவு பெற்றுவிடும் ஒரு அறிய நிகழ்ச்சியை நாம் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டிய தேவை ஏற்படும் போது நாம் Camera ஐ திறக்க வேண்டும். இதன் போது ஏராளமான செயலிகள் எமது Android சாதனத்தில் நிறுவப்பட்டிருந்தால் அது ஒரு சிரமமான காரியமாக அமைந்து விடும்.

இது போன்ற சந்தர்பங்களில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளையும் அவசரமாக திறந்து கொள்ள வேண்டிய செயலிகளையும் Notification Penal இல் இணைப்பதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக திறந்து கொள்ள முடியும் அல்லவா?

இந்த செயற்பாட்டினை செய்துகொள்ள உதவுகின்றது Bar Launcher எனும் Android சாதனத்துக்கான செயலி.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?


  • இதனை உங்கள் Android சாதனத்தில் நிறுவிய பின் Bar Launcher செயலியை திறந்துகொள்க.
Bar Launcher  Android செயலி.

  • பின் குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டிருக்கும் Plus (+) அடையாளத்தினை சுட்டுவதன் மூலம் உங்களுக்குத் தேவையான செயலிகளை ஒவ்வொன்றாக தெரிவு செய்து கொள்க.
அவ்வளவு தான்.

இனி அவைகள் Notification Bar இல் இணைக்கப்பட்டிருக்கும்.

பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலம் இதனை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.


இந்த செயலியானது அவசரத்துக்கும் அவசியத்துக்கும் நிச்சயம் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top