அழகிய புகைப்படங்களைக் கொண்டு உங்கள் கணினியை அலங்கரிப்பவரா? நீங்கள். 

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Wallpaper Bot எனும் இலவச மென்பொருள். இதன் மூலம் இணையத்தில் இருக்கக் கூடிய 30000 இற்கும் மேற்பட்ட பின்புலப்படங்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பின்புலப்படங்களை தெரிவு செய்து இதன் மூலம் தரவிறக்கிக் கொள்ள முடியும்.


Windows 7,Windows 8.1, மற்றும் விண்டோஸ் 10 ஆகிய இயங்குதளங்களில் சிறப்பாக இயங்கக்கூடிய இந்த மென்பொருளானது 18 MB அளவை கொண்டுள்ளது.

குறிப்பிட்ட மென்பொருளை நீங்கள் நிறுவிய பின் அதனை திறந்து தொடர்ச்சியாக Scroll Down செய்கையில் புதிய புதிய பின்புலப்படங்கள் தானாகவே தோன்றும்.

இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள DATE ADDED என்பதனை சுட்டுவதன் மூலம் மிக அண்மையில் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பெற முடிவதுடன் BY POPULARITY என்பதனை சுட்டுவதன் மூலம் அதிகம் பிரபலமான பின்புலப்படங்களை தரவிறக்கிக் கொள்ள முடியும்.

மேலும் இதில் தரப்பட்டுள்ள Tags எனும் பகுதி மூலம் Anime, Animals, Cars, Digital Art, Macro, Nature என பல்வேறு பிரிவுகளின் கீழ் பின்புலப்படங்களை பெற்றுக் கொள்ளவும் குறிப்பிட்ட மென்பொருளில் தரப்பட்டுள்ள Search பகுதியின் ஊடாக நீங்கள் விரும்பும் புகைப்படங்களை தேடிப்பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதனையும் பார்க்க: Windows 10 Hero பின்புலப்படங்களை (Wallpaper) வெவ்வேறு வர்ணங்களில் தரவிறக்கிக் கொள்ள உதவும் இணையதளம்.

குறிப்பிட்ட மென்பொருள் மூலம் பெறப்படும் ஒரு படத்தினை சுட்டும் போது உங்களுக்கு மூன்று வசதிகள் கிடைக்கும்.  1. DOWNLOAD

  1. SET AS BACKGROUND

  1. FAVORITES
இதில் DOWNLOAD என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட பின்புலப் படத்தினை உங்கள் கணினிக்கு தாரவிறக்கிக் கொள்ளவும் SET AS BACKGROUND என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தினை உங்கள் கணினிக்கு பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளவும் முடிவதுடன் FAVORITES என்பதை சுட்டுவதன் மூலம் அதனை குறிப்பிட்ட மென்பொருள் மூலம் பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக்கொள்ள முடியும்.

நீங்களும் இதனை உங்கள் கணினிக்கு தாரவிரக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.மேலும் இதனையும் பார்க்க: Windows கணனியில் எந்த வகையிலும் மாற்ற முடியாத வகையில் Desktop Wallpaper அமைப்பது எவ்வாறு?

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top