"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று நோய்க்கு நிவாரணம் அளிப்பதற்கான மருத்துவத்துறை பாரிய வளர்ச்சி கண்டிருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை மாறாக அன்றாடம் புதுப்புது நோய்கள் தொற்றிக் கொள்வதையும் இதனால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையுமே காண முடிகிறது.

ஆரோக்கியம்


எனவே இன்றைய உலகில் நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள சீரான உணவுப் பழக்கத்துடன் அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்த பலனை பெற்றுத் தரும்.இதனடிப்படையில் இன்று அனைவரது கைகளிலும் தவலக் கூடிய ஸ்மார்ட் சாதனங்களுக்குள் உடற்பயிற்சிகளை மேற் கொள்வதற்கான செயலிகள் உட்புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவொருவரும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கு தூண்டப்படுகின்றனர்.

எனவே ஒரு நாளைக்கு 7 நிமிடம் மாத்திரம் எனக்காக ஒதுக்குங்கள் நான் உங்களுக்கான ஆரோக்கியத்தை பெற்றுத்தருகிறேன் என உங்களை அழைக்கின்றது 7 Minute Workout எனும் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கான செயலி.


7 Minute Workout Android செயலி

  • அழகிய இடைமுகத்துடன் அருமையான பல வசதிகளை தரக்கூடிய இந்த செயலியை உலகளாவிய ரீதியில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இதில் 12 வகையான பயிற்சிகள் தரப்பட்டுள்ளது ஒவ்வொன்றும் 30 செக்கன்களை கொண்டது ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையில் 10 செக்கன்கள் இடைவேளை கிடைக்கும்.
  • ஒவ்வொரு பயிற்சிக்குமான மாதிரிப்படங்களும் அதற்கான விளக்கங்களும் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ளது. குறிப்பட்ட பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான மேலதிக விளக்கத்தை நீங்கள் பெற விரும்பினால் ஒவ்வொரு பயிற்சிக்குமான யூடியூப் Video இணைப்பும் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ளது.
  • மேலும் பயற்சிகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு தடவையும் குரல் மூலமான அறிவுறுத்தல்களை பின்பற்றலாம்.
  • இவைகள் தவிர நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பயற்சி தொடர்பான அனைத்து விவரங்களும் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டிருக்கும் நாட்காட்டி (Calendar) மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள பயிற்சிகளை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் தொப்பையை குறைத்து நாளடைவில் நல்ல வலுவான உடம்பை பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை.


இதனை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
தொடர்புடைய இடுகை:
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top