இன்று அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்படும் விண்டோஸ் கணினியானது ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.அந்த வகையில் Windows கணினியில் நாம் அறியாத ஏராளமான வசதிகளை எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போல் எமது கணினியில் இருக்கக் கூடிய ஏராளமான மென்பொருள்களையும் இன்னும் பல வசதிகளையும் Run Command களை பயன்படுத்தி மிக விரைவாகவும் இலகுவாகவும் திறந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதனடிப்படையில் பின்வரும் Run கட்டளைகளானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 1. winver எனும் Run கட்டளையை பயன்படுத்தி உங்கள் கணினி இயங்குதளம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். 2. calc எனும் Run கட்டளையை பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள கணிப்பொறியை (Calculator) திறந்துகொள்ள முடியும்.

 3. cttune எனும் Run கட்டளையை பயன்படுத்தி உங்கள் கணினியில் தோன்றும் எழுத்துக்களின் அமைப்பை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் அமைத்துக் கொள்ளலாம்.

  விண்டோஸ் ClearType Tuner


 4. எமது கணினியில் உள்ள Command Prompt ஐ பயன்படுத்தி ஏராளமான பயனுள்ள செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் இந்த Command Prompt ஐ திறந்து கொள்ள cmd எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம்.

 5. Windows கணினி பயன்படுத்துபவர்களில் Control Panel பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும். இதன் மூலம் கணினி தொடர்பான அனைத்து அமைப்புக்களையும் நிர்வகிக்க முடியும் இதனை Run Command மூலம் திறந்து கொள்ள control என தட்டச்சு செய்து Enter அலுத்துக.

   இதனையும் பார்க்க: எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் விரும்பும் Run Command மூலம் திறப்பது எவ்வாறு?

 6. உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து வன்பொருள் (Hardware) சாதனங்களையும் Device Manager மூலம் நிர்வகிக்க முடியும். உங்கள் கணினியில் இந்த Device Manager ஐ திறந்து கொள்ள devmgmt அல்லது devmgmt.msc எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம்.

  Device Manager விண்டோஸ்


 7. dxdiag இது மிகவும் பயனுள்ள ஒரு Run கட்டளையாகும் இதனை Run Program இல் தட்டச்சு செய்வதன் மூலம் DirectX Diagnostic Tool எனும் சாளரத்தினை பெறலாம் இதன் மூலம் உங்கள் கணினியின் இயங்குதளம், கணினியின் பெயர்,  Processor, Ram, VGA போன்ற உங்கள் கணினி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

  கணினி DirectX Diagnostic Tool


 8. diskmgmt அல்லது diskmgmt.msc எனும் Run கட்டளையின் மூலம் Disk Management எனும் சாளரத்தினை பெறலாம். இந்த சாளரத்தின் மூலம் உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் நினைவகளை நிர்வகிக்கலாம். உங்கள் கணினி வன்தட்டினை diskmgmt சாளரத்தின் மூலம் எவ்வாறு நிர்வகிக்கலாம் என நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவுகள் மூலம் பதிவிட்டிருந்தோம்.

  விண்டோஸ் Disk Management


 9. எமது விண்டோஸ் கணினியில் இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளும் Event Viewer என்பதில் பதியப்படுகின்றது. இந்த Event Viewer மூலம் எமது கணினி Log on/Log Off செய்யப்பட்ட நேரங்களையும் கூட அறிந்து கொள்ள முடியும் என்பதை நாம் ஏற்கனவே எமது Facebook பக்கத்தின் மூலம் விளக்கி இருந்தோம். Event Viewer ஐ எமது கணினியில் திறந்துகொள்ள eventvwr எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம்.

  விண்டோஸ் Event Viewer


 10. உங்கள் கணினியில் உள்ள Keyboard திடீர் என இயங்கவில்லையா? இதனால் நீங்கள் அன்றைய நாள் நீங்கள் கணினியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளும் தடைப்பட்டு விட்டதாக உணர்கிறீர்களா? வேண்டாம் கவலையை விடுங்கள் osk எனும் Run கட்டளையை பயன்படுத்தி உங்கள் இயங்குதளத்தில் உள்ள Keyboard ஐ திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதிவின் நீளம் கருதி வெறும் 10 Run கட்டளைகளையே இங்கு விளக்கி உள்ளோம் எனினும் இது போன்ற இன்னும் ஏராளமான பயனுள்ள வசதிகளை RUN கட்டளையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.இந்த பதிவு பயனுள்ளதாக அமைந்திருந்தால் கீழுள்ள கருத்துப் பெட்டி மூலம் உங்கள் எண்ணங்களை குறிப்பிடுங்கள். இறைவன் நாடினால் ஏனையவற்றினையும் இன்னுமொரு பதிவு மூலம் தருவதற்கு முயற்சிக்கிறோம்.


Love to hear what you think!

2 comments:

 1. பதில்கள்
  1. நீண்ட நாட்களுக்குப் பின் உங்களின் கருத்தை காண முடிந்தது.

   உங்கள் கருத்து நன்றி....!

   தொடர்ந்தும் இணைந்திருங்கள். (h)

   நீக்கு

 
Top