இன்றைய தொழில்நுட்ப உலகின் மிக வேகமான வளர்ச்சி காரணமாக அன்றாடம் பல புதுமைகள் புகுத்தப்பட்ட புதுப்புது சாதனங்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளது.
200GB SD Card நினைவகம்

அந்த வகையில் BARCELONA நகரில் இடம்பெற்ற MOBILE WORLD CONGRESS நிகழ்வில் 200GB கொள்ளளவு கொண்ட MicroSD நினைவகத்தை அறிமுகப்படுத்தி இருந்தது SanDisk நிறுவனம். தற்பொழுது இதனை Amazon தளத்தின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும்.

தற்போதைக்கு உலகின் அதிக கொள்ளளவை கொண்ட MicroSD சாதனம் இதுவாகும். 


இந்த MicroSD நினைவகத்தில் 20 மணித்தியாலங்களுக்கு இயங்கக்கூடிய Full HD வீடியோ கோப்புக்களை சேமித்து வைக்க முடியும்.

மிக வேகமாக தரவுகளை பரிமாறும் திறன் கொண்ட இதன் வேகம் ஒரு செக்கனுக்கு 90 Mb ஆகும். அதாவது ஒரு நிமிடத்தினுள் ஏறத்தாள 1200 புகைப்படங்களை பரிமாற்ற முடியும். 

 நீர், வெப்பம், அதிர்ச்சி, X-கதிர், மற்றும் காந்த ஈர்ப்புச் சக்தி போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இது Class 10 எனும் சிறந்த தரத்தில் அமைந்ததாகும். 

Amazon தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள இதன் விலை  239 அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இந்திய ரூபாய்களில் கிட்டத்தட்ட 15200 வரை விலை குறிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலம் இதனை Amazon தளத்தில் இருந்து கொள்வனவு செய்யலாம்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top